மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

முதலீடு: தடைகள் குறைக்கப்படும்!

முதலீடு: தடைகள் குறைக்கப்படும்!

உணவு பதப்படுத்துதல் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் விதமாக முதலீட்டு விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில் இதுவரையில் 8.7 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அளவை இன்னும் அதிகரிக்கும் விதமாக, முதலீட்டு விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரான ராஜிவ் அகர்வால், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் சில தடைகளைச் சந்திக்கின்றனர். அது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதைப் பன்னாட்டு நிறுவனங்களும் சர்வதேச முதலீட்டாளர்களும் எதிர்நோக்கியுள்ளனர். தற்போதைய நிலையில் இத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதோடு இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்கவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மொத்த விற்பனைத் தொழில்களுக்கும் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. விரைவில் புதிய தொழில் கொள்கை ஒன்றை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை இத்துறையில் புகுத்துவதற்கான அம்சங்கள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon