மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

ஆதார் தீர்ப்பு: தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பு!

ஆதார் தீர்ப்பு: தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பு!

ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தனியார் நிறுவனங்களின் தொழில் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களும், பரிவர்த்தனை வங்கிகளும் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்க்க ஆதார் எண்களையே பயன்படுத்துகின்றன. செப்டம்பர் 26ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், ஆதார் விவரங்களைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. இதனால் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பரிவர்த்தனை வங்கிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களாக இருக்கும் தனியார் நிறுவனங்கள் கடன்கள், மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு போன்ற சேவைகளை விற்பனை செய்வதற்கு ஆதார் எண்களைப் பயன்படுத்தியே விவரங்களைச் சரிபார்க்கின்றன.

ஆதார் அடிப்படையிலான கே.ஓய்.சி சரிபார்ப்பு முறையை மட்டுமே நம்பியிருந்த தனியார் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கே.ஓய்.சி முறையால் எந்தவோர் ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல் மின்னணு முறையில் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்க்க முடிந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், இனி வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாகத் தனியார் நிறுவனங்களின் தொழில் செலவு மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon