மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

3ஆம் பாகத்தை உறுதி செய்யும் ‘சண்டக்கோழி-2’!

3ஆம் பாகத்தை உறுதி செய்யும் ‘சண்டக்கோழி-2’!

விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகிக் கவனம் பெற்றுவருகிறது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடித்து வெளியான சண்டகோழி படத்தின் இரண்டாவத் பாகமாக சண்டக்கோழி-2 என்னும் படம் உருவாகிவருகிறது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க முந்தைய படத்தில் நடித்த ராஜ்கிரண் இதிலும் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார்.

வருகிற ஆயுத பூஜையையொட்டி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் இன்று (செப்டம்பர் 28) வெளியாகியுள்ளது. ஊர்,தேர், திருவிழா, பஞ்ச் வசனங்கள் என அப்படியே முதல் பாகத்தை நினைவுபடுத்துகிற இந்த ட்ரெய்லரில் புதிதாகத் தெரிவது கீர்த்தி சுரேஷ் மட்டுமே. அனல் அரசுவின் ஸ்டண்ட் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

வாடி வாசலைப் பிடிங்கிக்கிட்டு வெளில வர்ற காளை மாதிரி எப்படி நிக்கிறாரு பாருங்க என விஷாலுக்குக் கொடுக்கப்படும் முஸ்தீபுகள் அப்படியே மெர்சல் விஜய்யை நினைவுபடுத்துகிறது. ட்ரெய்லரின் இறுதியில் வரலட்சுமியும் விஷாலும் இணைந்து தோன்றும் காட்சி முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை கண்முன் காட்டுகிறது. எனவே இந்தக் காட்சி மூன்றாவது பாகத்திற்கான லீடிங்காக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

யுவன் இசையமைப்பில் விஷால் ஃபில்ம் ஃபேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon