மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

தொழிலாளர் நல அதிகாரிக்குச் சிறை!

தொழிலாளர் நல அதிகாரிக்குச் சிறை!

சொத்துக் குவிப்பு வழக்கில் தொழிலாளர் சேமநல நிதி அதிகாரிக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002 முதல் 2006ஆம் ஆண்டு வரை சென்னை தொழிலாளர் சேமநல நிதி அலுவலக அதிகாரியாகப் பணியாற்றியவர் பாண்டியன். வருமானத்துக்கு அதிகமாக ரூ.14 லட்சத்து 49 ஆயிரம் சொத்து சேர்த்ததாக, அவர் மீதும் அவரின் மனைவி வெண்ணிலா மீதும் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

பாண்டியன் மீதான வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.வசந்தி விசாரித்து வந்தார் . குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், பாண்டியனுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி. வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

வியாழன், 27 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon