மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 செப் 2018

நமக்குள் ஒருத்தி: அவள் பெண்ணாகிறாள்

நமக்குள் ஒருத்தி: அவள் பெண்ணாகிறாள்

நவீனா

பெண்களையும் ஆண்களையும் சமூகம் தனித்தனியே எதற்கெல்லாம் பாராட்டி வருகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்காமல்தான் பல நூற்றாண்டுகளாகக் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். பல தாய்மார்கள் தன் மகள்களைக் குறித்துப் பேசுகையில், 'என் பொண்ணு எல்லா வீட்டு வேலையிலயும் எனக்கு அவ்வளவு ஒத்தாசையா இருப்பா' என்று கூறிக் களிக்கக் கேட்டிருக்கிறோம். வீட்டில் எந்த வேலையிலும் உதவாமல் இருக்கும் பெண் பிள்ளைகளை எதற்குமே லாயக்கு இல்லாதவர்கள் என்று இன்னும் சில தாய்மார்கள் கரித்துக்கொட்டுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆண் பிள்ளைகளைப் பற்றிப் பேசும்போது, 'என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட், படிப்புல புலி, ஸ்போர்ட்ஸ்ல படு சுட்டி' என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

புள்ளிகளை வைப்பது யார்?

பாலின வேறுபாடுகளை உருவாக்குவதில் பெண்களையே வினையூக்கிகளாக ஆண் சமூகம் பயன்படுத்தி வந்திருக்கிறது. ஆண்கள் வைக்கும் புள்ளியில் பெண்கள்தான் அழகாகக் கோலம் போட்டுவருகின்றனர். ஆண் பிள்ளையைப் பொறுத்தவரை படிப்பிலும் விளையாட்டிலும் அவர்கள் பெறும் வெற்றியைக் கொண்டாடும் பெற்றோர், பெண் பிள்ளைகள் அற்புதமாகச் சமைப்பதிலும் வீட்டு வேலைகளைச் சித்திரமாகச் செய்வதிலும் பூரித்துப்போவது எதனால் என்கிற கேள்வி முதலில் பெண்கள் மனதில் எழ வேண்டும். 'இது அவர்களின் குடும்பமும் அவர்களின் சுற்றுப்புறமும்தான். பெண்கள் அவர்களுக்குச் சமைத்துப் போடுவதிலும், அதை அவர்கள் சுத்தம் செய்வதிலும் தவறேதுமில்லையே' என்றெல்லாம் பெண்களே எண்ணும்பட்சத்தில் பெண் விடுதலையைப் பற்றிப் பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்க முடியும்.

உளவியல் வளர்ச்சிகள் அனைத்தும் ஒரு பெண்ணுக்குள் நிகழும் பருவமானது அவளின் பதின்ம வயதேயாகும். சிமன்-டி-புவாவின் 'செகண்ட் செக்ஸ்' என்னும் நூலிலிருந்து 'ஒரு பெண், பிறப்பால் அல்ல, வளர்ப்பால் மட்டுமே பெண்ணாகிறாள்' என்கிற வாக்கியத்தின் அடிக்கடி பலர் மேற்கோள் காட்டுவதிலிருந்து அது விளக்கும் ஆழமான உண்மையை அறியலாம். ஒரு பெண்ணின் பதின் பருவமும், அவள் பெண்ணென்று உணரும் உளவியல் உருவாக்கமும் நிகழ்வது அவள் பெற்றோருடன் இருக்கும் நாட்களில்தான். வீட்டில் இருக்கும் ஆண்கள் இதை கவனிக்கத் தவறினாலும் பெண்கள் இதில் அதிக கவனம் செலுத்தியே ஆக வேண்டும். இந்த உளவியல் காரணிகள் சரிவர வளர்ச்சி அடையாமல் போவதால்தான் பின்னாளில் நிறைய பெண்கள் வாழ்நாள் முழுவதும் மன அழுத்தத்தில் உழன்று வருகின்றனர். இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆண் குழந்தைகளும் ஆணாதிக்கக் கோட்பாட்டின் அத்தியாயங்களை இந்த வயதில்தான் அறிந்துகொள்கின்றனர். அதற்கான சூழலாக அவர்களின் பெற்றோரின் செயல்பாடுகளே அமைந்து விடுகின்றன.

ஆர்வங்களிலும் ஆண் – பெண் பேதம்

குழந்தை வளர்ப்பில் முறையான அக்கறை காட்டப்படாமல் போவதால் அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான். கல்லூரிப் பருவத்தில் இருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களைச் சந்திக்க நேரிடும்போதும் அவர்களுடன் உரையாடும்போதும் இரு பாலினத்திற்குமிடையே அறிவு சார்ந்து அளவில்லா வேறுபாடு இருப்பதைக் காண முடிகிறது.

வளரிளம் பெண்கள் பொதுவாக தையல், சமையல், ஓவியம், ஹவுஸ் கீப்பிங் போன்ற குடும்பப் பாங்கான கலைகளில் ஆர்வம் காட்டுவதும், இவை சார்ந்த அறிவைப் பெருக்கிக்கொள்ள அக்கறை செலுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது. இளைஞர்கள் நாட்டு நடப்பிலும், உள்ளூர் மற்றும் உலக அரசியல், வணிகம், வரலாறு என்று சமூகம் சார்ந்த அறிவினை வளர்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதனால்தான் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் வாங்கினாலும் நீட், யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்ச்சி அடைய முடியாமல் போய்விடுகிறது. அதில் கேட்கப்படும் நாட்டு நடப்பு சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் பெண்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது.

அப்பா – அம்மா: மாறுபடும் முன்னுதாரணங்கள்

இப்படி அறிவு சார்ந்த வேறுபட்ட ரசனைகளை அடிப்படையில் உருவாக்குவது அவர்கள் பிறந்து வளரும் குடும்பச் சூழலும் சமூகச் சூழலுமே ஆகும். வீட்டில் அப்பா காலையில் பேப்பர் படிப்பார், அது மகனையும் தினசரிகளைப் படிக்க மறைமுகமாக ஊக்குவிக்கும். தான் படித்த செய்திகளை இருவரும் பகிர்ந்துகொள்ளுவர். டிவியிலும் ஆண்டிராய்டு ஆப்களிலும் பெரும்பாலும் செய்தி தொடர்பான விஷயங்களையே அப்பா அதிக நாட்டத்துடன் பார்ப்பார். இவற்றை எல்லாம் பார்த்து வீட்டில் ஆண் பிள்ளைகள் அந்தப் பழக்கங்களை கிரகித்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறான சூழலில் பெண் பிள்ளைகளுக்கு சமையல் கட்டைத் தவிர இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன என்று அறிவுறுத்தி அவற்றுக்கான கதவுகளைத் திறந்து வைப்பது பெண்களின் பொறுப்பாகிறது. பெண் பிள்ளைகளின் ஆளுமை உருவாக்கம் பெரிதும் அம்மாவைப் பார்த்தே நிகழ்கிறது. எனவே, அவர்கள் ஆளுமைப் பண்புகளில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரப் பெண்கள்தான் முயல வேண்டும். இது சமுதாயத்தின் அடிப்படை உயிர்நாடியான குடும்பக் கட்டமைப்பில் நிகழ வேண்டிய மாற்றம்.

இதுவே பின்னாளில் சமூகம் என்னும் பெருவெளியில் ஆண் பெண் சமநிலை உருவாவதற்கு அடிகோலும் என்பதைப் பெண்களும் அறிந்தால் மட்டுமே அந்த மாற்றம் நிகழும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி திங்களன்று வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

தொடரின் முதல் பகுதி

இரண்டாம் பகுதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

வெள்ளி 21 செப் 2018