மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கூட்டு!

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கூட்டு!

தினமும் பூரி போன்ற உணவுகளுக்கு உருளைக்கிழங்கு மசாலா, வடகறி போன்ற தொடுகறிகளை ருசித்திருப்பீர்கள். இதனால் நீங்கள் சலிப்படைந்திருக்கக்கூடும். ஆக, பூரிக்கும் சப்பாத்திக்கும் புது ரகத்தில் சுவையான உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - 2

பட்டர்பீன்ஸ் - 100 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க

தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - 4

கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - கால் கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ் இரண்டையும் நன்கு கழுவி, குக்கரில் இரண்டையும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

பின்னர், நீராவி அடங்கியதும் மூடியைத் திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆறவிடவும்.

உருளைக்கிழங்கு ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.

வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்த மசாலா, உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மசாலா வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சுவையான உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கூட்டு ரெடி.

வியாழன், 20 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon