மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 செப் 2018

நமக்குள் ஒருத்தி: விடியல் தொடங்கும் இடம் எது?

நமக்குள் ஒருத்தி: விடியல் தொடங்கும் இடம் எது?

நவீனா

சமூகம் பெண்களை வஞ்சிக்கிறது. சமூகம் பெண்கள் மீது ஏற்றத்தாழ்வுகளைத் திணிக்கிறது. சமூகம் பெண்களை ஆண்களுக்கு இரையாக்குகிறது - என்றெல்லாம் வாதாடும் ஸ்டீரியோடிப்பிக்கல் ஐடியாக்களில் வரும் 'சமூகம்' என்ற சொல் ஆணையும் பெண்ணையும் உள்ளடக்கியதுதான். ஆண்மையக் கோட்பாடுகள் இன்றளவும் பெண்களை அடிமைப்படுத்தத்தான் பயன்படுகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றாலும் அதையெல்லாம் நன்கு அறிந்த நிலையிலும் பெண்கள் அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டிய சூழலைத்தான் முதலில் மாற்ற முயல வேண்டும்.

தாழ்வுமனப்பான்மை கொண்ட பெண்ணியவாதிகள் சிலர் ஆண்கள் மீது அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சுமத்திவிட்டு, ஆண்களை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டுப் பெண்ணியம் பேசுகிறார்கள். அதை உண்மையென்று நம்பி, ஆண்களே தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்த பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதிலும் குடும்பம் என்ற கட்டமைப்பை உடைத்துவிட்டு தான் ஒரு ஃபெமினிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதும் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறது. ஆண் என்ற பாலினமும் தேவை தான். அவர்களின் உதவியோடுதான் பெண் விடுதலையை முற்றிலுமாக அடைய முடியும். ஏனெனில் ஆண்களின் மனமாற்றமே பெண்களின் தளைகளைக் கட்டவிழ்க்க அடிப்படையாக அமையும்.

தன் விரலால் தன் கண்ணை…

அதற்காக ஆண்களிடம் தவறே கிடையாது எனச் சொல்வதற்கில்லை. மூன்றாந்தரக் குடிமக்கள்போலப் பெண்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆண் சமூகம் பெண்களைக் கொண்டே கட்டமைத்துவிட்டது. தன் விரலால் தன் கண்ணையே குத்தும்படி செய்வது போன்ற தந்திரம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். பெண்கள் அந்தத் தந்திரத்தைப் புரிந்துகொள்ளாதபடி ஆணாதிக்கச் சமூகம் இன்றளவும் அதைக் காப்பாற்றி வைக்க விரும்புகிறது.

மார்க்ரெட் தாச்சர், இந்திரா காந்தி, பெனாசிர் பூட்டோ, ஜெயலலிதா, மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி போன்ற பெண் ஆளுமைகள் நம் வரலாற்றில் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள், நம்மிடையே வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். ஒரு பெண் மிகப் பெரிய ஆளுமையாக இருக்கும்போது அவளை யாரும் எளிதில் பொது வெளியில் தரக்குறைவாக நடத்த முடியாது. பெண்கள் தனக்குச் சமூகம் சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு விஷயத்தையும் சுயசிந்தனைக்கு உட்படுத்தி சரி எது, தவறு எது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பெண் என்பவள் பணம், பதவி, புகழ், அதிகாரம் என அனைத்துக் காரணிகளையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமாவதோ தனதாக்கிக்கொண்டிருக்க வேண்டும். ஆணாதிக்க கோட்பாடுகள் அவளைக் கீழே தள்ளும்பட்சத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிடித்து மேலே ஏறி வர அவை உறுதுணையாக இருக்கும். ஒரு பெண் தனது ஆளுமைப் பண்புகளை வளர்த்தெடுக்க எப்போதும் தயங்காதவளாய் இருக்க வேண்டும். ஆண்களின் சிக்கல்களை அறிந்திருக்க வேண்டும். அதேசமயம் தன்னைச் சுற்றி இயங்கும் பெண்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள முனைப்புக் காட்ட வேண்டும்.

பழங்காலம் தொட்டு இன்று வரை பெண்கள் மனதளவிலான முதிர்ச்சி அடைவதற்கு ஆண்கள்தான் ஊக்கப்படுத்தி வந்திருக்கின்றனர். ஆணாதிக்கச் சமுதாயம் பெண்களின் பிரச்சினைகளைக்கூட ஓர் ஆணின் கோணத்தில்தான் பார்க்க அனுமதித்திருந்தது. அரிஸ்டாட்டில், சிக்மன்ட் பிராய்டு என்று பெண் சார்ந்த கருத்துகளை முதலில் பேசியவர்கள் ஆண்கள்தான். தமிழ்ச் சமூகத்தில்கூட இதே நிலைதான். பெரியார் போன்ற ஆண்கள்தான் இங்கும் பெண் விடுதலையை வலியுறுத்தி வந்தனர். பெண்கள் குடும்பம் சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ வெற்றிகரமாக இயங்குவதற்கும், சுதந்திர உணர்வைப் பெறுவதற்கும், மிகப் பெரிய மனமாற்றமே நிகழ வேண்டியிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் 'டிரான்சென்டலிசம்' என்பார்கள். முடிவெடுக்கும் திறனில் அதிக கவனம் செலுத்த பெண்கள் தவறிவிடுவதும் அதன் பொருட்டுப் பின்னாளில் பிரச்சினைகள் வரும்போது அதற்கு ஆண்களே முழுக் காரணம் என்று குற்றம் சுமத்துவதும் இன்றைய குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.

குறைந்துவரும் பெண்களின் எண்ணிக்கை

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் 2017 - 18 ஆண்டுக்கான 'எக்கனாமிக் சர்வே ஆஃப் இந்தியா' வெளியானது. அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளியில் கணக்கெடுப்பின்படி ஆண்களுக்கு நிகரான பெண்களின் விகிதம், கடந்த ஆண்டை விட 0.5% என்கிற விதத்தில் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையக் காரணமாகப் பெண் கருச்சிதைவு மற்றும் கருவிலேயே குரோமோசோம்களை மாற்றியமைத்து ஆண் குழந்தையாகப் பிரசவித்தல் எனப் பல காரணங்களைச் சமூக ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஒரு கூட்டம் 'பெண் ஆதரவாளர்கள்' என்ற முத்திரையோடு ஆண்கள்தான் இந்த விகிதாச்சாரம் நிலைப்பாடற்றுப் போனதற்கு ஒரே காரணம் என்ற பிரச்சாரத்தையும் பரப்பி வருகின்றனர்.

குழந்தை என்பது குடும்பத்தின் முதன்மையான ஓர் அங்கம். பெரும்பாலும் குடும்பங்களில் பெண்கள் தேவைப்படும் நேரத்தில் அத்தியாவசியத்தை உணர்ந்து குடும்ப முடிவுகளில் பங்கெடுக்க வேண்டும். குழந்தை ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று கணவன் முடிவு செய்யும்போது பெண் குழந்தை பிறந்தால் அது வாரிசாகாது, ஆண் குழந்தைதான் வாரிசாகக் கருதப்படும் என்கிற ஆண் - மையச் சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பவளாகத்தான் ஒரு பெண்ணைச் சமூகம் வளர்த்திருக்கிறது. முதலில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்று பெண்களைச் சிந்திக்கச் சொல்லும் அதே சமூகம்தான் முதலில் பெண் குழந்தை பிறக்கும்போது, கொள்ளி போட வாரிசு வேண்டும் என்று அடுத்த குழந்தையைப் பற்றி யோசிக்க வைக்கிறது.

பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்றவற்றிற்கான சட்டங்களும் தண்டனைகளும் மிகக் கடுமையாக இருந்தாலும் இன்னும் அத்தகைய குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுபற்றிப் புகார் அளிக்க வேண்டிய பெண்களும் வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். பெண்களின் விடுதலையை, பெண்ணுக்கான சம உரிமையை, ஆண் என்னும் பாலினத்தை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு பேசுவதினாலோ அல்லது பெண்கள் மீது ஆண்டாண்டுகளாகத் திணிக்கப்பட்ட ஆண் - மையச் சிந்தனைகளின் தாக்கம் முற்றிலுமாக இல்லை என்று மறுப்பதாலோ மட்டும் அடைந்துவிட முடியாது.

பெண்ணுக்கான விடியல், ஆண் பெண் என்ற இரு பாலினத்தின் மீதான பொதுவான புரிதலிலிருந்துதான் தொடங்குகிறது என்பதை உணரும் தருணமே உண்மையான மானுடம் மலரும்.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வெள்ளியன்று வெளியாகும் - ஆசிரியர்)

பகுதி-1

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

திங்கள் 17 செப் 2018