மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

புதிய தொடர்: நமக்குள் ஒருத்தி!

புதிய தொடர்: நமக்குள் ஒருத்தி!

நவீனா

தற்காலப் பெண்களின் சமூகச் சூழல்கள், கலாச்சார மாற்றங்கள், குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், உளவியல் ரீதியான மன அழுத்தங்கள், பெண்களின் ஆரோக்கியம், அவர்களின் வளர்ச்சி, அதற்கான தடைகள் எனப் பல கோணங்களில் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளைப் பேசும் தொடர் இது.

பெண் சார்ந்த பிரச்சினைகள் என்றவுடன், இது பெண்ணியம் பேசும் தொடராக இருக்கும் அல்லது ஆண் சமூகத்தை வசை மழை பொழிந்து, பெண்களுக்குப் பிரச்சினையே இந்த ஆண்கள் தாங்க என்று பெண்களை முற்றிலும் நீதியரசிகள் போல் தீர்ப்பெழுதும் தொடராக இருக்கும் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம்.

'பெண்' என்கிற கட்டமைப்பே இந்தச் சமூகத்தில் ஆண் சார்ந்ததுதான். பெண்களின் பிரச்சினைகள் பற்றிய புரிதல்கள் பெரும்பாலும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் ஆணுக்கும் இருக்க வேண்டியதே இன்றைய நிலையில் அவசியமாகிறது. ஆண்களை முற்றிலும் புறக்கணித்துப் பேசுவதாலேயே பெண்ணியக் கருத்துகள் பலவும் தோல்வியில் முடிகின்றன. ஒரு பெண்ணின் - தாய், மனைவி, மருமகள், காதலி, மகள் என அவளின் அனைத்துப் பாத்திரங்களுமே ஆண் என்றொரு பாலினம் இருப்பதால்தான் நிகழ்கின்றன. ஆக, 'பெண் சார்ந்த' என்று சொல்லப்படும் அனைத்து விஷயங்களுமே மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஆணைப் பற்றியும் பேசுவதேயாகும். அதன் அடிப்படையில் இது ஆண்களுக்குமான ஒரு தொடராகத்தான் அமையப்போகிறது.

பெண்களின் பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசாத தளமே இல்லையென்றாலும், ஒவ்வொருவரின் சிந்தனையும் பார்வையும் இதுவரையில் வேறுபட்டே இருந்திருக்கின்றன. தொடர்ந்து இம்மாதிரியான கட்டுரைகளில் ஊடகங்கள் கவனம் செலுத்துவதன் நோக்கமும் கூட ஆண், பெண் என இருபாலரிடத்திலும் நடத்தை மாற்றங்கள் (Behavioral changes) நிகழ வேண்டும் என்பதேயாகும். ஒரு மனிதனின் நடத்தை என்பது கால் யுங்கின் கோட்பாட்டின்படி கூட்டு நனவிலியாக (Collective unconscious) உள்ளூர ஆழமாகப் பதிந்திருப்பது. அதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் எறும்பு ஊறிக் கல் தேய்வதற்கு எடுத்துக்கொள்ளும் மிக நீண்ட கால அளவு தேவைப்படும். எனவே, பெண்கள் சார் பிரச்சினைகளை திரும்பத் திரும்ப பேசுவதும் எடுத்தாளுவதும் மூலமாகவே நடத்தை மாற்றங்கள் சாத்தியப்படும்.

இன்னும் இன்னும் பெண்ணென்று நீளப்போகும் வானத்தில் பறக்கலாம்! இந்த தொடரைப் பற்றிய உங்கள் கருத்துகளை [email protected] என்ற இமெயில் ஐடியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

(இந்தத் தொடர் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் வெளியாகும் - ஆசிரியர்)

(கட்டுரையாளர்: நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

ஞாயிறு, 16 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon