மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

தம்பிக்கு ஒரு கட்சி பார்சல்: அப்டேட் குமாரு

தம்பிக்கு ஒரு கட்சி பார்சல்: அப்டேட் குமாரு

எலெக்‌ஷன் வர்றதுக்குள்ள சிவகார்த்திகேயனுக்கு ‘தம்பிக்கு ஒரு கட்சி பார்சல்’ன்னு சொல்லிடுவாங்கன்னு நினைக்குறேன். படம் ஹிட்டானா உடனே அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு இங்க அலப்பறையை கூட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் அவரும் கட்சி ஆரம்பிச்சாத்தானே மரியாதை? அப்ப சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிச்சுட்டாரான்னு குதர்க்கமால்லாம் கேட்க கூடாது. நாலு படம் ஹிட்டானவங்களுக்கு எல்லாம் முதல்வர் டோக்கன் கொடுக்குறாங்களாம். நானும் டாப் மாஷ், மியூசிக்கலி ஆப் எல்லாம் இப்பதான் டவுன்லோடு பண்ணுனேன். இதுல பெர்ஃபார்ம் பண்ணி ரசிகர்களை கூட்டி சினிமாவுல இறங்கிறலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க வேணா பாருங்க, இந்த குமாரு நவரசங்களையும் தெறிக்கவிட்டு சீக்கிரமே எண்ட்ரி கொடுப்பேன். எப்பா மீம் கிரியேட்டர்ஸ்.. என்னையும் கலாய்ச்சு மீம் போடுவீங்களா, போட்டாலும் போடுவாய்ங்க ஃபன்னி கைஸ். நீங்க அப்டேட்டை பாருங்க, சீமராஜா வசனத்தை மனப்பாடம் பண்ணிட்டு வாரேன்.

@kathir_twits

துணிகடையில் நாளைய தேவைகளுள் ஒன்றாகி விடும் அதி நவீன ஆண்கள் வெயிட்டிங் ஹால் !!

@rahimgazali

அலம்பலுக்கு கண்ணாடி போடறான். சேஃப்டிக்கு ஹெல்மெட் போடுன்னா மறுக்கறான்.

@shivaas_twitz

ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் - பிரதமர் மோடி

எங்க அந்த ஏழை..?

ஏழைன்னு சொன்னது என்னை தான்... ஏழைத்தாயின் மகன் ஏழை தானே..?!

@gips_twitz

என்னை தோற்கடிக்க வேண்டும் என்றால் நீ என்னைவிட அதிக தேசபக்தி உள்ளவனாக இருக்கவேண்டும் - மோடி

ஆத்தாடி உங்கள விட அதிக தேசபக்தினா பெட்ரோல் விலை 200ஐ தான்டிருமே ...

@Thaadikkaran

அரசியல்வாதிகள் வருவதை பேனர் வைப்பதற்கு முன்னே ரோட்டை சுத்தம் செய்வதன் மூலம் சொல்லாமல் சொல்லி விடுகிறது மாநகராட்சி..!

@amuduarattai

முன்னர்,ஒரு திட்டத்தை தீட்டி, அதில் கமிஷன் எவ்வளவு என முடிவு செய்வார்கள். இப்போது,கமிஷன் எவ்வளவு என்று முடிவு செய்துவிட்டு தான்,திட்டமே தீட்டுகிறார்கள்.

@nandhu_twitts

ரொம்ப நாள் கழிச்சு நண்பர் ஒருத்தர பாத்து பேசிட்டு இருந்தேன்..

உடனே அவர் "சீக்கிரமா வீட்டுக்கு போனா ஒரு உயிர காப்பாத்திடுவேனு" சொன்னாரு..

பயந்து போயி என்னடா ஆச்சுனு கேட்டா "செல்போன்-ல சார்ச் இல்ல துடிச்சிகிட்டு இருக்கு"னு சொல்லிட்டு கிளம்பிட்டார்..!!

@Kannan_Twitz

பல் இருக்கும் போதே பக்கோடா சாப்பிட்டுவிட்டால் பல் இல்லாதபோது நாம் சாப்பிடாத பக்கோடாவா என மனதை தேத்திக்கொள்ளலாம்... இல்லை என்றால் வருத்தம் தான்.

@Thaadikkaran

நம்ம வாழ்க்கை ஷூக்குள்ள போடுற ஓட்ட ஷாக்ஸ் மாதிரிதான் இருக்கு, ஆனா ஷூவை மட்டும் பார்த்திட்டு ஆஹா ஓஹோன்னு சொல்லிட்டு போயிடுறாங்க..!!

@kalpbagya32

கடினமான சுவரின் விரிசலில் முளைத்தெழும் அழகிய செடியைப் போன்றது சிக்காலான நேரங்களில் உண்டாகும் சிந்தனை

@Writer_Naina

விஜயகாந்த் பேச்சைக்கேட்க கூடுன கூட்டம்லாம் விஜய்காந்த்க்கு தான் ஓட்டுபோடுவாங்கன்னு நம்புனதும் ! கூட்டம் கூட்டமா விநாயகர் சதூர்த்திவழிபாடு செய்ய போற மக்கள் கூட்டம்லாம் பிஜேபிக்குதான் ஓட்டுபோடுவாங்கன்னு சொல்றதும் ஒண்ணு

@19SIVA25

சிசிடிவி ஃபுட்டேஜ் பத்திலாம் நீங்கலாம் பேசலாமா சென்றாயன்..!?!

சரி சொல்லு இட்லி சாப்பிட்டது யாரு.!? ஏண்டா ஓடுற நில்லுடா

@Yathra Neela

தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளத் தான் இந்தச் சமூகம் எவ்வளவு உருண்டு பிறழுகிறது

@Kozhiyaar

மழைக் காலத்தில் சாலையில் பேன்ட் சட்டையில் சேறு அடிக்காமல் பயணிக்கும் தற்காப்புக் கலையில் கற்றுத் தேர்ந்தவர் வெகு சிலரே!!!

@Narayanasamy Samy

இந்தியா சுதந்திரத்திற்கு பின் 67 வருசத்தில் பெட்ரோல் விலை ரூ.52 தான் நரேந்திரமோடி அரசு 52 மாதத்தில் ரூ.85 +33 நல்ல வளர்ச்சிதானே ..

@abuthahir707

காலேஜ் படிக்கும் போது வீட்ல பைக் எடுத்து கேட்டன் ஆக்ஸிடன்ட் ஆகிரும் சொல்லி பயமுறுத்துனாங்க இப்போ எடுத்து கேட்டா பெட்ரோல் விலையை சொல்லி பயமுறுத்துராங்க

@rahimgazali

செல்போன் வாங்குன புதுசில் 'என்னடா ஒரு போன் கூட வரல'ன்னு ஏக்கமா பார்த்திட்டு இருப்பேன். இப்ப செல்போன்ல கால் வந்தா, 'பேஸ்புக், ட்வீட்டர் பார்த்துட்டு இருக்கும்போது, யாரு அது தேவையில்லாம கால் பண்றது?'ன்னு நினைக்க தோணுது.

SD Prabhakar

டீசலை வைத்து ஓடிக்கொண்டிருந்த கூடங்குளம் அணுமின் நிலையம் டீசல் விலையேற்றத்தால் மூடப்பட்டுள்ளதா?

@வாசுகி பாஸ்கர்

விஜய் மல்லையா யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடினார் என்கிற களங்கம், அபாண்டபழி இன்றோடு துடைக்கப்பட்டது.

அவர் அருண் ஜெய்ட்லியிடம் சொல்லிவிட்டு ஊர் காசு எல்லாம் வாங்கிக்கொண்டு தான் போயிருக்கிறார்.

தவறாக புரிந்துக்கொண்டோம், மன்னித்து விடு மல்லையா

-லாக் ஆஃப்

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon