மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

மாலுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாலுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் 1.54 லட்சம் கப்பல் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செப்டம்பர் 13ஆம் தேதி மத்திய கப்பல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கப்பல் போக்குவரத்துத் துறையில் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காகக் கப்பல் மாலுமிகளுக்கான தேர்வுகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு சதவிகித விண்ணப்பதார்கள் மட்டுமே இந்தத் தேர்வுகளில் வெற்றிபெறுவார்கள். ஆனால் இப்போது தேர்ச்சி விகிதம் 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இத்துறையில் வேலைபார்ப்பதற்காக அதிகப்படியான இளைஞர்கள் முன்வருகிறார்கள்.

கப்பல் மாலுமிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வலிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் பயிற்சி பெறும் காலத்திலேயே கடல் பரப்பைப் பார்வையிடும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றுவதற்கான வலிமையையும் அனுபவத்தையும் இது தரும். முன்பு 92,000 பேர் வரையில்தான் கப்பல் சார்ந்த வேலைகளில் இருந்தனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை 1.54 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, கப்பல் மாலுமிகளின் எண்ணிக்கையும் 1.5 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 60,000 பேர் கப்பல் மாலுமிப் பணியில் இப்போது இணைந்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon