மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஆப்பிளில் இது புதுசு!

ஆப்பிளில் இது புதுசு!

பயனர்களின் ஓராண்டு காத்திருப்புக்குப் பின் நேற்று நடைபெற்ற ஆப்பிளின் அறிமுக விழாவில் iPhone Xs, iPhone Xs Max, iPhone XR என்ற மூன்று புதிய வெளியீடுகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. வடிவத்தில் இவை முந்தைய மாடலான iPhone Xஐ போல இருந்தாலும் அம்சங்களில் முற்றிலும் மாறுபட்டவை. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மூன்று ஐ-போன்களிலும் இதுவரை இல்லாத பல முக்கிய சிறப்பம்சங்களை அந்நிறுவனம் புகுத்தியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

டூயல் சிம்

ஐ-போன் வரலாற்றில் முதன் முறையாக பழைய டூயல் சிம் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், அது இ-சிம் எனும் தனித்துவ அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சிம்முக்கான ஸ்லாட் ஃபிஸிக்கலாகவும், மற்றொரு சிம்முக்கான ஸ்லாட் மதர்போர்டில் சிப் வடிவிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்தியாவில் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்துக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் இன்னும் இ-சிம் தொழில்நுட்பத்துக்கு தயாராகவில்லை.

பெரிய திரை

தற்போது வெளியாகியுள்ள iPhone Xs Max இதுவரை வெளியான ஐ-போன்களிலேயே பெரிய திரையிலான ஐ-போனாகும். இது 6.5 இன்ச் திரையுடன் OLED Super Retina displayவையும் கொண்டது.

IP68 ரேட்டிங்

iPhone Xs, iPhone Xs Max ஆகிய இரு ஐ-போன்களிலும் முதன்முறையாகத் தண்ணீர் மற்றும் தூசுகளை எதிர்க்கும் IP68 ரேட்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த போனை 2 மீட்டர் தண்ணீர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வைத்திருந்தாலும் அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

ஃபேஸ் ஐடி

ஆப்பிள் நிறுவனம் தனது TouchID sensor தொழில்நுட்பத்தைக் கடந்து முதல் முறையாக முற்றிலும் FaceID தொழில்நுட்பத்துக்கு மாறியிருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் தற்போது வெளியான மூன்று ஐ-போன்களிலும் அதன் Notch அமைப்பில் FaceID sensor பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் HDR

தற்போது வெளியாகியுள்ள 3 ஐ-போன்களும் ஸ்மார்ட் HDR அம்சங்களைக் கொண்டது. எனவே இதில் எடுக்கப்படும் multiple shot புகைப்படங்களின் வெளிப்பாடு நிற வேறுபாடுகள், நிழலமைப்புகளைக் கொண்டு மிகவும் துல்லியமாக இருக்கும்.

ஆடியோ

இதில் ஓடும் வீடியோக்களை full stereo audioவில் பதிவு செய்ய முடியும் என்பதால் அதனை திறம்பக் கேட்கும் போதும் அதே தெளிவு இருக்கும்.

A12 பாயானிக்

ஆப்பிளின் iPhone Xs, iPhone Xs Max, iPhone XR இவை மூன்றும் A12 பாயானிக் 6-core processor உடன் அடுத்த ஜென்ரேசனுக்கான Neural engine-ஐயும் கொண்டுள்ளது. இது A11 பாயானிக் processor-ஐக் காட்டிலும் 15 சதவிகிதம் வலிமையானதாகவும், பேட்டரித் திறன் பயன்பாட்டில் 50 சதவிகிதம் குறைவாகவும் செயல்படக்கூடியது.

Storageஇல் புதுமை

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐ-போன்களின் அம்சங்களில் மட்டும் புதுமையைப் புகுத்தாமல் இந்த முறை அதன் ஸ்டோரேஜ் அளவிலும் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான iPhone X, iPhone 8 , iPhone 8 Plus ஐ-போன்களில் அதிகபட்சமாக 256GB ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. இம்முறை வெளியான 3 மாடல்களிலும் அது 512GB யாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon