மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 21 பிப் 2020

மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் பாரதிராஜா

மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ள படங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

படம் இயக்குவதில் பிஸியாக இருந்துவந்த இயக்குநர் பாரதிராஜா சமீப காலமாக படங்களை இயக்குவதைவிட நடிப்பதில் அதிகக் கவனம் செலுத்திவருவதாகத் தெரிகிறது. அந்தவகையில் தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சசிகுமார் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

சுசீந்திரனும் தற்போது நடிக்கவந்து டைரக்டர் கம் ஆக்டர் எனும் பட்டியலில் இணைந்துள்ளதால் பாரதிராஜா, சசிக்குமார், சுசீந்திரன் ஆகியோர் இணைந்த இந்த கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதுபோக ஏற்கனெவே சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு படத்தில் நடித்ததன் வாயிலாக பாரதிராஜா சிறப்புக் கவனமும் பெற்றிருந்ததால் இந்தப் படத்தில் அவருக்கு என்ன மாதிரியான ரோல் கொடுக்கப்படும் எனும் ஆவலையும் ரசிகர்களிடம் தூண்டியுள்ளது இந்தப் படம்.

சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நிலையில் ‘தரமணி’ புகழ் வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கிறார் பாரதிராஜா. புஷ்கர்-காயத்ரியிடம் உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்தப்படத்தில் முதலில் இயக்குநர் கெளதம் மேனன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது நடிக்கவில்லை எனவும் அந்த கதாபாத்திரத்தில்தான் பாரதிராஜா நடிக்கிறார் எனவும் தற்போது கூறப்படுகிறது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon