மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

கன்னடத்தில் அறிமுகமாகும் இனியா

கன்னடத்தில் அறிமுகமாகும் இனியா

2010ஆம் ஆண்டு வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் மலையாள நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் 2011ஆம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழக அரசால் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

தமிழில் இவர் நடித்த, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசானி, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்கள் பெரிய அளவில் போகாத கரணத்தால், தாய் மொழியான மலையாளத்திலும், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனையடுத்து தற்போது, பிரமோத் சக்ரவர்த்தி இயக்கும் ‘ட்ரோனா’ என்ற திரைப்படம் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகிறார் இனியா. இந்த படத்தில் சிவராஜ் குமார், ஸ்வாதி சர்மா, சாது கோகிலா உள்படப் பலர் நடிக்கிறார்கள். மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக இனியா நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது பெங்களூரில் நடந்துவருகிறது. அதில் கலந்து கொண்டு இனியா நடித்து வருகிறார்.

இது தவிர, மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்து முடித்துள்ள ‘பொட்டு’ படம் வெளிவர வேண்டியிருக்கிறது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon