மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

பெரிய உடல், சிறிய மூளை!

பெரிய உடல், சிறிய மூளை!

தினப் பெட்டகம் – 10 (14.09.2018)

காண்டாமிருகம் பற்றிய முக்கியமான சில தகவல்கள்:

1. உலகில் மொத்தம் ஐந்து இன காண்டாமிருகங்கள் இருக்கின்றன. இவற்றில் மூன்று இனங்கள் ஆசியாவில் வாழ்வது; இரண்டு ஆப்பிரிக்காவுடையது.

2. ஐந்து இனங்களில் பெயர்கள்: கறுப்பு காண்டாமிருகம் (Black Rhinoceros), வெள்ளைக் காண்டாமிருகம் (White Rhinoceros), இந்திய காண்டாமிருகம் (Indian Rhinoceros), ஜாவன் காண்டாமிருகம் (Javan Rhinoceros) மற்றும் சுமத்திரன் காண்டாமிருகம் (Sumatran Rhinoceros).

3. அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை.

4. காண்டாமிருகத்தின் தோல் மிகவும் தடிமனாக இருக்கும்.

5. காண்டாமிருகத்தின் மூளை மிகவும் சிறியது.

6. காண்டாமிருகங்கள் சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.

7. உலகில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கும் அதிகமாக காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.

8. காண்டாமிருகங்கள் அவற்றின் கொம்புக்காக வேட்டையாடப்படுகின்றன.

9. காண்டாமிருகத்தின் கொம்பு கெராட்டின் என்ற பொருளால் ஆனது. மனிதர்களின் நகம், முடி, குதிரைகளின் குளம்புகள், ஆமைகளின் ஓடுகள் ஆகியவையும் இந்தப் பொருளால் ஆனவை.

10. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 5,00,000 காண்டாமிருகங்கள் இருந்தன. தற்போது உலக அளவில் 29,000 காண்டாமிருகங்களே இருக்கின்றன.

- ஆஸிஃபா

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon