மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

100% காதல்: கிளாமருக்கு பஞ்சமில்லை!

100% காதல்: கிளாமருக்கு பஞ்சமில்லை!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காதலர்களைச் சேர்த்துவைக்கக் குழந்தைகளைப் பயன்படுத்தும் படங்கள் அதிக அளவில் வந்து, தற்போது குறைந்துள்ள நிலையில் மீண்டும் அந்த வகையில் உருவாகியுள்ளது 100% காதல் திரைப்படம்.

ஜி.வி.பிரகாஷும் ஷாலினி பாண்டேவும் நெருங்கிய உறவினர்கள்; ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பதின் பருவத்தைச் சேர்ந்த அவர்களுக்குள் உருவாகும் காதலை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதலைச் சேர்த்துவைக்கவும் பிரித்துவைக்கவும் குழந்தைகளே திட்டமிடுகின்றனர். குழந்தைகள் நடித்திருந்தாலும் இது குழந்தைகளுக்கான படமாக அல்லாமல் இளைஞர்களைக் குறிவைக்கும் விதமாக கிளாமர் காட்சிகளே நிறைந்துள்ளன.

சந்திரமௌலி இயக்கும் இந்தப் படம், தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா இணைந்து நடித்த ‘100% லவ்’படத்தின் ரீமேக்காகும். கனேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். தம்பி ராமையா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு செம, நாச்சியார் ஆகிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், ஜெயில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம், சசி இயக்கத்தில் நடிக்கும் படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ள படம் என எட்டு படங்கள் வரை கைவசம் உள்ளன.

100% காதல் டீசர்

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon