மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

இணையத்தைக் கலக்கும் மக்கள் இசை ஜோடி!

இணையத்தைக் கலக்கும் மக்கள் இசை ஜோடி!

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் பாடியுள்ள பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுவருகிறது.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சார்லி சாப்ளின் -2. முதல் பாகமான சார்லி சாப்ளினின் இரண்டாவது பாகமாக உருவாகிவரும் இதில் முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அம்ரிஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன மச்சான் எனும் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடனமாடியுள்ள இதில் தனது வழக்கமான நளின மற்றும் கேலி நடன அசைவுகளுடன் நடனமாடியிருக்கிறார் பிரபுதேவா. அந்த ஜோடியின் நடனத்தைப் போலவே வீடியோவில் ஈர்க்கிற இன்னொரு ஜோடி இந்தப்பாடலை பாடியுள்ள செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி ஜோடிதான்.

சூப்பர் சிங்கரில் இதே வகைப் பாடலைப் பாடி கவனம் பெற்ற மக்கள் இசைப் பாடகர்களாக அறியப்படும் இவர்கள் தற்போது இந்தப் பாடல் வழியாகவும் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுவருகின்றனர்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon