மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

ஏற்றம் காணும் டிஜிட்டல் வர்த்தகம்!

ஏற்றம் காணும் டிஜிட்டல் வர்த்தகம்!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடியை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய மொபைல் மற்றும் நெட்வொர்க் கூட்டமைப்பு செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘பயணங்கள், வர்த்தகம் மற்றும் பயன்பாட்டு சேவைகள் பிரிவுகளில் டிஜிட்டல் வர்த்தகம் வலுவான வளர்ச்சி காணும். டிஜிட்டல் வர்த்தகம் ஆண்டுக்கு 34 விழுக்காடு வளர்ச்சியை எட்டி வருகிறது. 2017ஆம் ஆண்டில் டிஜிட்டல் வர்த்தகம் ரூ.2.04 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் அதிகரித்து ரூ.2,37,124 கோடியை எட்டும்.

இதில் பயணங்கள் பிரிவு 54 விழுக்காடு பங்களிப்புடன் முதன்மை வகிக்கும். இதன் மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடியாக இருக்கும். உள்நாட்டு விமானக் கட்டணங்கள் செலுத்துதல், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தல் ஆகியவை பயணங்கள் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்கும். இதற்கடுத்து, பேருந்து மற்றும் கேப் புக்கிங் செய்யும் வர்த்தகத்துக்கான மதிப்பு ரூ.5,174 கோடியாக இருக்கும். பயணங்கள் அல்லாத பிரிவைப் பொறுத்தவரையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் ரூ.73,845 கோடி பங்கையும், பயன்பாட்டு சேவைகள் ரூ.10,201 கோடி பங்கையும், திருமண வரன்கள் மற்றும் விளம்பரங்கள் பிரிவு ரூ.3,689 கோடி பங்கையும், பொழுதுபோக்கு, ஆன்லைன் மளிகை பொருட்கள் மற்றும் உணவு விநியோக சேவைகள் துறை ரூ.6,060 கோடி பங்கையும் எட்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் வலுவான வளர்ச்சியை எட்டிவரும் அதே வேளையில், வழக்கமான முறையில் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கும் நடைமுறையும் எந்தவித தொய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon