மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மக்களை அவமதித்துவிட்டார்!

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மக்களை அவமதித்துவிட்டார்!

தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று(செப்டம்பர் 13) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன். ராதாருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, “திமுக மற்றும் அமமுக உள்பட எந்த ஒரு கட்சிக்கும் பிரதமரை தேர்வு செய்ய அருகதை கிடையாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதுள்ள இடங்களைவிட அதிகமான இடங்களை கைப்பற்றி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி நிச்சயமாக உருவாகும்” என தெரிவித்திருந்தார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரும் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சி நடத்திய பாரத் பந்த் தோல்வி இல்லை. வெற்றிகரமாக நடைபெற்றது” என்று தெரிவித்தார். திமுக மற்றும் அமமுக உள்பட எந்த ஒரு கட்சிக்கும் பிரதமரை தேர்வு செய்ய அருகதை கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் “தமிழ் நாட்டில் உள்ள மக்களை அவமானப்படுத்தும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்” என குற்றம்சாட்டியவர் ஏழு பேர் விடுதலையில் ஆளுநரின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon