மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வாகன இறக்குமதித் தடை நீக்கம்!

வாகன இறக்குமதித் தடை நீக்கம்!

வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.

அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் வகுத்துள்ள தற்போதைய விதிமுறைகளின்படி, ரூ.28 லட்சம் வரை விலை கொண்ட நான்கு சக்கர வாகனங்களையும் 800 சி.சி. அல்லது அதற்கு மேற்பட்ட திறனுடைய இருசக்கர வாகனங்களையும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இறக்குமதி செய்ய முடியும். இதற்கான கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிகள் முன்பு இருப்பதைப் போலவே வசூலிக்கப்படும். ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் உள்ள சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இருந்தாலே போதும்; அந்த வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம்.

புதிய விதிமுறைகளின் படி, ஒவ்வொரு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமும் அதன் வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,500 கார்களையோ அல்லது இருசக்கர வாகனங்களையே இறக்குமதி செய்துகொள்ளலாம். அவை சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தாலே போதுமானது. அதேபோல, 500 டிரக் மற்றும் பேருந்துகளையும் இறக்குமதி செய்யலாம். எனினும், இந்திய சாலைகளில் இயங்கும் வகையில் வலதுபுறம் ஸ்டீரிங் இருப்பது கட்டாயம். மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் இந்த அறிவிப்பால் டொயாடோ, நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon