மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!

இனி டிகிரி வேண்டாம், திறமை போதும்!

கூகுள், ஆப்பிள், ஐபிஎம் போன்ற உலகின் பெரிய நிறுவனங்களில் சேர இனி டிகிரி தேவையில்லை. திறமை இருந்தால் போதும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இன்று வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டி வதைக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுயமாக வேலை செய்யத் தெரியாத, நிறுவனங்களை மட்டுமே நம்பிப் பிழைக்கக்கூடிய ஓர் இளைஞர் கூட்டத்தை உருவாக்கியதுதான். அவர்கள் அப்படிப் பிழைக்கத் தெரியாதவர்களாக இருப்பதற்குக் காரணம் படிப்பு சம்பந்தப்பட்ட மாயைதான். படிப்பும் டிகிரியும்தான் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றும், அவை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்று நாம் நம் சந்ததியரை நம்பவைத்தோம். மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை மதிக்காமல், மதிப்பெண்களைத்தானே மதித்தோம்.

இனி அதற்கெல்லாம் இடமில்லை. இனிமேல் மதிப்பெண்களைவிட மாணவர்களே முக்கியமானவர்களாகப் பார்க்கப்படுவார்கள். வேலை தேடல் இணையதளமான கிளாஸ்டோர் நிறுவனமானது குறிப்பிட்ட 15 நிறுவனங்களில் பணிபுரிய டிகிரி எனப்படும் பட்டம் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இது பட்டம் பெறாதவர்களின் திறமைக்கான மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் முன்னனி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் நிறுவனர்கள் டிகிரி இல்லாதவர்கள்தான். அவர்கள் தங்கள் மீதும், தங்கள் திறமை மீதும் அதீத நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அவர்களின் நிறுவனங்களில் சேர்வதற்கு நமக்கு டிகிரி வேண்டும் என்ற நிலைமை இருந்தது. இனி இந்த நிலை கொஞ்சம் கொஞ்மாக மாற்றமடையும்.

உலக வணிகத் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் 15 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் சேருவதற்கு இனி டிகிரி தேவையில்லை, திறமை இருந்தால் போதும் என்று அறிவித்துள்ளன. அந்நிறுவனங்களின் பெயர்கள்:

கூகுள்

யர்னஸ்ட் & யங்

பெங்குயின் ரேண்டம் ஹவுஸ்

கோஸ்ட்கோ வோல்சேல்

வோல்சேல்ஃபுட்ஸ், ஹில்டன்

பப்ளிக்ஸ்

ஆப்பிள்

ஸ்டார்பக்ஸ்

நார்டஸ்ட்ரோம்

ஐபிஎம்

பாங்க் ஆப் அமெரிக்கா

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்தியாவில் உள்ளன. எனவே, விரைவில் இந்தியாவிலும் டிகிரி இல்லாத திறமையாளர்களைப் பணிக்கு எடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

சமீபத்தில் தமிழக அரசுகூட 12ஆம் வகுப்பு முடித்த உடனே வேலை கிடைக்கும் அளவிற்குப் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள்!

- நரேஷ்

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon