மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஏப் 2020

வெப்சீரிஸ்: தயக்கம் காட்டும் கியாரா

வெப்சீரிஸ்: தயக்கம் காட்டும் கியாரா

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி வெப்சீரிஸ்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

தமிழைவிட இந்தித் திரையுலகில் அதிகளவிலான வெப் சீரிஸ்கள் வெளிவருகின்றன. முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் பங்கெடுத்துவருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அடுத்ததாக இணைய ஊடகத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது உறுதியாகி வருகிறது. “தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வந்தாலும் நான் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன். வெப்சீரிஸ் பக்கம் செல்ல விருப்பம் இல்லை. ஒருவேளை இன்னும் இரண்டு ஆண்டுகள் சென்ற பின் எனது கருத்தில் மாற்றம் இருக்கலாம்” என்று டிஎன்ஏக்கு அளித்த பேட்டியில் கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் என நான்கு இயக்குநர்கள் இணைந்து ஆந்தலாஜி பாணியில் இயக்கிய லஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது. பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து உருவான அந்தப் படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய அத்தியாயத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவரது நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றதுடன் சர்ச்சைகளையும் சந்தித்தது. வைபரேட்டர் பயன்படுத்துவதாக அவரது கதாபாத்திரம் உருவாகியிருந்தது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் அமைவது குறித்து வருத்தம் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கியாரா, “இல்லை. ஏனென்றால் அது கரன் ஜோஹரின் படம். இது போன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் வெப்சீரிஸில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். ஒருவேளை லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தை அவர் இயக்கவில்லை என்றால் நான் நடித்திருப்பது சந்தேகமே” என்று கூறியுள்ளார்.

விஜய், அட்லி இணைந்து பணியாற்றவுள்ள அடுத்த படத்தில் கியாரா அத்வானியை நடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon