மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

தேவைக்கேற்ப சிறப்பு ரயில் இயக்க முடிவு!

தேவைக்கேற்ப சிறப்பு ரயில் இயக்க முடிவு!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில் 85 சதவிகிதம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 11ஆம் தேதியன்று பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கியது. 8 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் நிரம்பிவிட்டன. முக்கிய ரயில்களின் இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு டிக்கெட்டுகள் முழுவதும் தீர்ந்துவிட்டன.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில் 85 சதவிகிதம் பேர் ஆன்லைனில் பதிவு செய்ததால், ரயில் நிலையங்களில் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜனவரி 12ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்றும், ஜனவரி 13ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளையும், 14ஆம் தேதிக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமையும் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான பயணிகள் ஆன்லைனுக்கு மாறியதால், டிக்கெட் கவுண்டர்களில் உள்ள கூட்டம் பாதியாகக் குறைந்துவிட்டது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

மக்களின் தேவைகளுக்கேற்ப, பொங்கல் பண்டிக்கைக்கு சிறப்பு ரயில் மற்றும் சுவிதா ரயிலை இயக்க ரயில்வே முடிவெடுக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon