மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

ஜெய் இப்போ ‘சிங்கர்’ ஜெய்

ஜெய் இப்போ ‘சிங்கர்’ ஜெய்

நடிகர் ஜெய், தான் நடிக்கும் புதிய படத்தில் பாடகராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.

வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் வாயிலாக கவனம் பெற்றவர்கள் நடிகர்கள் ஜெய் மற்றும் நிதின் சத்யா. ஜெய்யை வைத்து ஜருகண்டி எனும் படத்தை தயாரிப்பதன் வாயிலாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக நிதின் சத்யா அறிமுகமாகியுள்ளதைப் போலவே நிதின் சத்யாவின் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் பாடகராகவும் அறிமுகம் ஆகியுள்ளார் ஜெய்.

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருந்த சிங்கிள் ட்ராக் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஜெய் பாடியுள்ள பாடல், லிரிக்கல் மற்றும் மேக்கிங் வீடியோவாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 'செய்யுறதை செஞ்சு முடி' எனத் துவங்கும் இந்தப்பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். போபோ ஷாஷி இசையமைத்துள்ளார். நிதின் சத்யா, ஜெய், ஸ்ரீகாந்த் தேவா, ஆகியோர் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

பாடலின் காட்சியமைப்புகளும் வரிகளும் படத்தில் கதாநாயகனின் என்ட்ரி சாங்காக இது இருக்கலாம் என அனுமானிக்க வைக்கும் விதத்தில் உள்ளன. ஜெய் இப்போதுதான் பாடகராக அறிமுகம் ஆகிறார் என்றாலும் மியூஸிக் ஏரியா, அவருக்கு ஒன்றும் புதிது அல்ல. இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய குடும்ப உறவினரான ஜெய், சிறுவயதில் தேவாவிடம் கீபோர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.

இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜருகண்டி படத்தின் பிற பாடல்கள் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகின்றன.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon