மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

விக்ரம் பிரபுவின் அடுத்த அப்டேட்!

விக்ரம் பிரபுவின் அடுத்த அப்டேட்!

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

விக்ரம் பிரபு நடிப்பில் இந்த ஆண்டு பக்கா, 60 வயது மாநிறம் என இரு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்குகிறார். மதுக்கூர் மூவிஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வால்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘பேராண்மை’, ‘பூலோகம்’ படங்களில் பணியாற்றிய எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இந்தப் படத்துக்கும் இசையமைக்க உள்ளார்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன், அர்ஜுன், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதில் விக்ரம் பிரபு புதிய தோற்றத்தில் வரவிருக்கிறார். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

இப்படத்தின் டைட்டில் போஸ்டரை விக்ரம் பிரபுவை திரைத்துறைக்கு அறிமுகம் செய்த இயக்குநர்களான லிங்குசாமி, பிரபு சாலமோன் வெளியிட்டுள்ளனர். போஸ்டரை பார்க்கும்போது போலீஸ் கதையா, அல்லது ராணுவ வீரரின் கதையா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் உருவாகும் ‘கழுகு-2’ படத்துக்குப் பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon