மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

சிறப்புப் பார்வை: ஆளுநருக்கு வேறு வழி இல்லை - மார்க்கண்டேய கட்ஜு

சிறப்புப் பார்வை: ஆளுநருக்கு வேறு வழி இல்லை - மார்க்கண்டேய கட்ஜுவெற்றிநடை போடும் தமிழகம்

எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரையின் மீது ஆளுநர் என்ன முடிவை எடுப்பார்? அவரால் அந்தப் பரிந்துரையை நிராகரிக்க முடியுமா?

எழுவர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டயே கட்ஜு தனது கருத்தை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் எழுவரையும் விடுலை செய்யத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்திருந்தது. தற்போது ஆளுநரின் பக்கம் அனைவரின் கவனம் திரும்பியுள்ளது. ஆளுநருக்கு எழுவரையும் விடுதலை செய்ய அதிகாரம் உள்ளதா, மாநில அரசு பரிந்துரைத்த பின்னர் எழுவர் விடுவிக்கப்படுவார்களா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

என்னைப் பொறுத்தவரை ஆளுநருக்கு வேறு வழியில்லை. அவர் மாநில அரசின் பரிந்துரைகளுக்கேற்ப அவர்களை விடுதலை செய்தாக வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இங்கிலாந்து அரசமைப்பு மாதிரியைப் பின்பற்றிப் பெறப்பட்ட நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநர்தான் அரசர் மாதிரி. அரசியல் சட்டத்தின் தலைவரான அவர், அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்க வேண்டும். இதுதான் சட்டமாகும். இச்சட்டமானது உச்ச நீதிமன்றத்தின் சேம்ஷர் சிங் எதிர் பஞ்சாப் அரசு என்ற வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வால் தீர்ப்பளிக்கப்பட்டதாகும். இந்தத் தீர்ப்பானது அரசியல் சட்டத்தின் 42ஆவது திருத்தம் வருவதற்கு முன்னரே அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். 42ஆவது திருத்தமும் அரசியல் சட்டத்திலுள்ளதையேதான் உள்ளார்ந்த விதமாகக் கூறியது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, மேலும் இரண்டு தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்தின. மரு ராம் எதிர் இந்திய அரசு (1980) மற்றும் கேஹர் சிங் எதிர் இந்திய அரசு (1988) ஆகிய வழக்குகளின் விசாரணையில், உச்ச நீதிமன்றம் கூறுகையில், அரசியல் சட்டத்தின் பிரிவு 72, குறிப்பிட்ட சில வழக்குகளில், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கவும் தண்டனையை நிறுத்தி வைக்கவும் குறைக்கவும் அல்லது ரத்து செய்யவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 161இன்படி ஆளுநருக்கும் அதேபோல அதிகாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது. இந்தத் தீர்ப்புகளில் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் நடக்க வேண்டுமே அன்றி தன்னுடைய விருப்பப்படி நடக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எனவே, ஆளுநருக்கு வேறு வழி எதுவும் இல்லை. எழுவரை விடுவித்துத்தான் ஆக வேண்டும்.

இரண்டு அச்சங்கள்

இவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்பதை சந்தேகிப்பவர்கள் இரண்டு அச்சங்களைக் கொண்டுள்ளனர். ஆனால், அந்த அச்சங்கள் தேவையற்றவை. இதில் முதல் அச்சமானது வி.ஸ்ரீஹரன் என்ற முருகன் (2015) என்ற வழக்கின் தீர்ப்பிலிருந்து வருகிறது. இதன் தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழுள்ள அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 161இல் உள்ள ஆளுநரின் அதிகாரத்துக்கும் சம்பந்தமில்லை. வழக்கு சிபிஐயினால் விசாரிக்கப்படும்போது கைதிகளை விடுதலை செய்யக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் அரசியல் சட்ட அதிகாரம் என்பதும் அரசியல் சட்டத்தின் பிரிவு 161இன்படி கைதிகளை விடுவிப்பதும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதும் வெவ்வேறானவையாகும்.

இரண்டாவது அச்சமானது ஆளுநர் மன்னிப்பு வழங்கினால் அல்லது விடுவித்தால் அவரது நடவடிக்கையானது நீதிமன்றத்தினால் ஒருதலைப்பட்சமானது என்று ரத்து செய்யப்படும் என்பதாகும். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். முன்னர் விவாதிக்கப்பட்ட மரு ராம் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் ஆளுநர் மன்னிப்பு வழங்கும் அல்லது விடுவிக்கும் நடவடிக்கையானது நீதிமன்றத்தினால் பரிசீலினைக்குள்ளாக்கப்படும். அது ஒருதலைப்பட்சமாக இருந்தாலோ அல்லது தவறான உள்நோக்கத்தோடு இருந்தாலோ அவரது நடவடிக்கை ரத்து செய்யப்படும். ஆனால், அவர் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில்தான் எழுவரை விடுதலை செய்கிறார் என்றால் அது எப்படி தவறான உள்நோக்கம் கொண்டதாக இருக்க முடியும்?

உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டப்பிரிவு 72 அல்லது 161 ஆகிய இரு பிரிவுகளின்படி சில நிலைமைகளைக் கருணையின் அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளன. இப்படிக் கருணை காட்ட வேண்டிய நிலைமைகள் ஏராளமாக இந்த வழக்கில் உள்ளன. அவர்கள் 27 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கின்றனர். அதில் அவர்கள் தேவைக்கும் அதிகமாக மிகவும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர். இது போதாதா?

ஷேக்ஸ்பியரின் மெர்சன்ட் ஆஃப் வெனிஸ் என்னும் நாடகத்தில் நீதி என்பது கருணையோடு இணைந்தது என்று ஒரு வரி வரும். அதைத் தற்போது நினைவுகூர்வோம். ஆளுநர் உடனடியாகச் செயல்பட்டு எந்த நிபந்தனையும் இன்றி அவர்களை மன்னித்து விடுவிக்க வேண்டும்.

நன்றி தி இந்து, செப்டம்பர் 13, 2018

தமிழில்: சேது ராமலிங்கம்

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon