மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 அக் 2019

எண்ணெய் பாக்கெட்டில் எலி!

எண்ணெய் பாக்கெட்டில் எலி!

ஆத்தூர் அருகே மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில், குமரவேல் என்பவர் வாங்கிய கடலை எண்ணெய் பாக்கெட்டில் எலி கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்த புகாரின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவர், கடந்த 10ஆம் தேதியன்று ராணிப்பேட்டையில் உள்ள லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற மளிகைக் கடையில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட் வாங்கியுள்ளார்.

கடையில் வாங்கிய எண்ணெய் பாக்கெட்டை வீட்டுக்கு வந்து பிரித்து பார்த்தபோது, குமரவேலின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம், எண்ணெய் பாக்கெட்டின் உள்ளே அழுகிய நிலையில் எலி ஒன்று இருந்தது. இது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார் குமரவேல்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ராணிப்பேட்டையில் உள்ள லட்சுமி ஸ்டோர்ஸ் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனமான சத்யம் கடலை எண்ணெய் ஆலையில் ஆய்வு நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், இந்த விசாரணை நடுநிலையுடன் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon