மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

கச்சிதமான ஹாரர் அனுபவம்!

கச்சிதமான ஹாரர் அனுபவம்!

விமர்சனம்: யு டர்ன்

குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் சிறிய அளவில் விதிகளை மீறுவது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஹாரர் த்ரில்லர் பாணியில் சொல்கிறது யு டர்ன் திரைப்படம்.

2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான யு டர்ன் படத்தை அதன் இயக்குநர் பவன் குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்துள்ளார்.

பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பயிற்சி நிருபராக உள்ளார் ரக்‌ஷனா (சமந்தா). போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் மனநிலை என்ன என்பதை அறிய, குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேர்வு செய்து சிலரை நேர்காணல் செய்ய முயல்கிறார். அவரது அலுவலகத் தோழன் ஆதித்யாவிடம் (ராகுல் ரவீந்திரன்) உதவி கேட்கிறாள். அவர்களது நட்பு காதலாக மலரும் புள்ளியில் நிற்கிறது. ரக்‌ஷனாவின் முயற்சி அவரை ஒரு தொடர் கொலை வழக்குடன் இணைக்கிறது. ரக்‌ஷனாவின் நோக்கம், சரியானதாகப்படுவதாலும் காவல் துறை அதிகாரி (ஆடுகளம் நரேன்) வழக்கை அவசரமாக முடிக்க நினைப்பதாலும் அதிர்ஷ்டவசமாக விடுவிக்கப்படுகிறார். சமந்தாவின் யூகம் அவரைத் தொடர்ந்து இதில் இயங்கச் செய்கிறது. அவருக்குக் காவல் துறையில் பணியாற்றும் நாயக் (ஆதி) உதவ, அவரும் பிரச்சினையில் வலுவாகச் சிக்குகிறார். இந்த மரணங்களின் பின்னால் உள்ளவற்றைத் தேடிக் கதை பயணிக்கிறது.

படத்தின் டைட்டில் போடுவதிலிருந்தே இயக்குநர் கதையைக் கூறத் தொடங்கிவிடுகிறார் இயக்குநர் பவன் குமார். காதல் அரும்பும் தருணம், பயத்தால் நடுங்கும் இடம், உயிர் போனாலும் பரவாயில்லை எனச் செயலில் இறங்கும் துணிச்சல் என நடிப்பில் முத்திரை பதிப்பதற்கான ஏராளமான இடங்களை சமந்தா சரியாகப் பயன்படுத்தியுள்ளார். பிரச்சினைகளின் தன்மைக்கேற்றாற்போல் காவல் துறை அதிகாரி ஆதியின் உடல் மொழி மாறும்போது சம்பவத்துக்குள் பார்வையாளர்களும் பங்கெடுக்கும் அனுபவம் கிடைக்கிறது. குறைவான இடங்களில் வந்தாலும் நரேன், பூமிகா ஆகியோர் மனதில் நிற்கின்றனர்.

மரணத்துக்கு முந்தைய தருணத்தை விளக்கும் சமிக்ஞை, திகிலுடனும் சுவாரஸ்யமாகவும் படைக்கப்பட்டுள்ளது. மரணம் நிகழும்போது நடைபெறும் சம்பவங்கள் அதற்கே உரிய அழகியலுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில் உள்ள திருப்பங்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன.

முதல் மரணம் நடைபெறும்போதே படம் எதை நோக்கிப் போகிறது என்பது பார்வையாளர்களுக்கு தெளிவாகிவிடுகிறது. ஆனால், கதாபாத்திரங்கள் மிகவும் பொறுமையாக அந்த இடத்திற்கு வந்து சேர்கின்றனர். காவல் துறையினர் சமந்தாவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காட்சி நம்பகத்தன்மையோடு படைக்கப்படவில்லை. தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதால் வசனங்கள், காட்சி நடைபெறும் இடங்கள், கதாபாத்திரங்கள் தேர்வு ஆகியவற்றில் அந்நியத்தன்மை இருப்பதை உணர முடிகிறது.

நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு வண்ணங்கள், கோணங்கள் மூலம் த்ரில் உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகத்தின் வேலை கச்சிதமாக உள்ளது. பாடல்களைத் தவிர்த்துப் பின்னணி இசையில் கவனம் செலுத்தியுள்ளார் பூமா சந்திர தேஜஸ்வி.

எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் இருந்து சற்றும் விலகாமல், கையாண்ட கதாபாத்திரங்களுக்குள்ளே இயக்குநர் கதையை நகர்த்தியிருப்பது விறுவிறுப்பைக் கொடுக்கிறது. ஹாரர் படங்களுக்கே உரிய வழமையான அம்சங்களைத் தவிர்த்து நெருடல் இல்லாமல் கதையை முடித்திருப்பது ஒட்டுமொத்தமாக நல்ல திரைப்பட அனுபவத்தைத் தருகிறது.

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon