மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: பசுப் பாதுகாப்பு வன்முறைகளால் வீழ்ந்த பொருளாதாரம்!

சிறப்புக் கட்டுரை: பசுப் பாதுகாப்பு வன்முறைகளால் வீழ்ந்த பொருளாதாரம்!

நிலேஷ் ஜெயின்

வர்த்தக அமைச்சகத்தின் தகவல்படி, இந்திய தோல்பொருள் தொழிற்துறையின் ஏற்றுமதி 2016-17ஆம் நிதியாண்டில் 3 விழுக்காடும், 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.30 விழுக்காடும் சரிந்துள்ளது. ஆனால், 2013ஆம் ஆண்டிலோ தோல்பொருள் ஏற்றுமதி 18 விழுக்காட்டுக்கும் மேலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2014-15ஆம் ஆண்டில் தோல்பொருள் ஏற்றுமதி 9.37 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் தோல்பொருள் ஏற்றுமதியின் வளர்ச்சி 19 விழுக்காட்டுப் புள்ளிகளுக்கும் மேல் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. தேசிய அளவில் தோல்பொருள் தொழிற்துறை 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களாகவும், தலித்துகளாகவும் உள்ளனர். உலகத்தின் மொத்த காலணி உற்பத்தியில் இந்தியாவின் தோல்பொருள் தொழிற்துறை 9 விழுக்காட்டுப் பங்கைக் கொண்டுள்ளது.

மாட்டிறைச்சிக்குத் தடை விதித்ததன் விளைவாக வளர்ச்சியடைந்து வந்த தோல்பொருள் தொழிற்துறையும், அதன் தொழிலாளர்களும், முக்கியமாக இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017 ஜூன் 25ஆம் தேதியன்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தோல்பொருள் ஏற்றுமதி மதிப்பு 2014-15ஆம் ஆண்டில் 6.49 பில்லியன் டாலரிலிருந்து 2016-17ஆம் ஆண்டில் 5.66 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. சீனாவின் தோல்பொருள் ஏற்றுமதித் தொழிற்துறையோ தோல்பொருள் மற்றும் காலணி ஏற்றுமதியில் 3 விழுக்காட்டைப் பதிவு செய்து 76 பில்லியன் டாலரிலிருந்து 2017ஆம் ஆண்டில் 78 டாலராக உயர்ந்துள்ளது.

பசுப் பாதுகாப்பு வன்முறையால் பாதிப்படையும் தோல்பொருள் தொழிற்துறை

தோல்பொருள் ஏற்றுமதிக் கவுன்சிலின் தலைவரான ரஃபீக் அகமது, “நாட்டில் மாட்டை இறைச்சிக்காகக் கொலை செய்வது குறைந்த பிறகு உள்நாட்டில் தோல்பொருள் விநியோகம் 5 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை சரிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.பொருளாதார செயல்பாடுகளை அளவிடுவதற்குத் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. தோல்பொருட்கள் துறையின் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு 2015-16ஆம் ஆண்டில் இரண்டு விழுக்காட்டுப் புள்ளிகள் சரிந்துள்ளது. ஆனால், 2014-15ஆம் ஆண்டிலோ ஏறத்தாழ 14 விழுக்காட்டுப் புள்ளி வளர்ச்சியை எட்டியுள்ளது.

உற்பத்தியும், ஏற்றுமதியும் சரிந்துகொண்டு இருக்கும்போதே பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகளும் அதிகரித்து வந்துள்ளன. பசுப் பாதுகாப்பு தொடர்பாக 2012ஆம் ஆண்டில் ஒரு தாக்குதலும், 2013ஆம் ஆண்டில் ஒரு தாக்குதலும் நடைபெற்றுள்ளது. பிறகு இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் மூன்றாக உயர்ந்து, 2017ஆம் ஆண்டில் அதிர்ச்சியூட்டும்விதமாக 37ஆக உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டில்தான் பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள் படுமோசமாக இருந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2015ஆம் ஆண்டில் முகமது அக்லக் சைஃபி என்ற வேளாண் தொழிலாளி கொல்லப்பட்டபோது பசுப் பாதுகாப்பு வன்முறைகள் அதிகரித்ததை வெளிப்படையாகவே உணர முடிந்தது. முகமது அக்லக் சைஃபியின் மரணத்துக்குப் பிறகு 2015ஆம் ஆண்டில் மட்டும் 12 பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகளால் பத்து நபர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 2016ஆம் ஆண்டில் 24 பசுப் பாதுகாப்பு வன்முறைகளில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டனர். 2016ஆம் ஆண்டில் 11 நபர்களும், 2018ஆம் ஆண்டில் 8 நபர்களும் கொல்லப்பட்டதாக ஃபேக்ட்செக்கர் நிறுவனத்தின் தகவல் கூறுகிறது. அரசின் கொள்கைகளின் வெளிப்பாடாக பசுப் பாதுகாப்பு வன்முறைகள் அதிகரித்திருப்பது போலவும், தோல்பொருள் சரக்குகளின் ஏற்றுமதி சரிந்திருப்பது போலவும் தெரிகிறது.

தோல் பொருள் தொழிற்துறையின் இலக்குகளை எட்டுவதில் தோல்வியுற்ற ‘மேக் இன் இந்தியா’ திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் பல்வேறு நோக்கங்களில், 2020ஆம் ஆண்டிற்குள் தோல்பொருட்கள் ஏற்றுமதியின் மதிப்பை 900 கோடி டாலராக உயர்த்துவதும் ஒன்றாகும். 2015-16ஆம் ஆண்டில் தோல்பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு 5.86 பில்லியன் டாலராக இருந்தது. உள்நாட்டுச் சந்தை மதிப்பை தற்போதைய 12 பில்லியன் டாலரிலிருந்து 18 பில்லியன் டாலராக உயர்த்துவதும் பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கங்களில் அடங்கும்.

இந்தியாவில் முதல் பசுப் பாதுகாப்பு வன்முறை நடைபெற்ற பிறகு பிரதமரின் பதிலுக்காக நாடே காத்திருந்தது. இறுதியாக 2015 அக்டோபர் 8ஆம் தேதியன்று பீகாரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், “இஸ்லாமியர்களை எதிர்ப்பதா அல்லது வறுமையை எதிர்ப்பதா என்பதை இந்துக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்துக்களை எதிர்ப்பதா அல்லது வறுமையை எதிர்ப்பதா என்பதை இஸ்லாமியர்கள் தீர்மானிக்க வேண்டும். இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று பேசினார்.

“இந்த நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மத நல்லிணக்கமும், சகோதரத்துவமுமே நாட்டை முன்நோக்கி நகர்த்தும். அரசியல்வாதிகள் பரப்பும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக அவ்வாறு பேசுகிறார்கள்” என்று மோடி பேசினார்.

பசுவைப் புனிதப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான தாக்குதல்களில் பலியானவர்கள் இஸ்லாமியர்களாகவும், தலித்துகளாகவுமே உள்ளனர். 2014ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 115 இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 23 தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டுதான் தலித்துகளுக்கு மிகவும் மோசமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டில் நடைபெற்ற ஒட்டுமொத்த பசுப் பாதுகாப்பு வன்முறைகளுக்குப் பலியானவர்களில் 34 விழுக்காட்டினர் தலித்துகளே ஆவர்.

ஒட்டுமொத்த பசுப் பாதுகாப்பு வன்முறைகளில் 51 விழுக்காடு பாரதிய ஜனதா கட்சி ஆண்ட மாநிலங்களிலும், 11 விழுக்காடு காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளன. பசுப் பாதுகாப்பு வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ அனைவருமே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் விவசாயத்தையோ, கால்நடைகளையோ, இறைச்சி வணிகத்தையோ நம்பியே இருந்துள்ளனர்.

பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கும், பொருளாதாரத்துக்கும் இடையேயான முரண்பாடு

2017ஆம் ஆண்டு மே மாதத்தில், விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. இதன்படி நாடு முழுவதிலும் உள்ள விலங்குச் சந்தைகளில், இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக தோல்பொருட்கள் தொழிற்துறைக்குப் பலத்த அடி விழுந்தது.

2014ஆம் ஆண்டில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில், பசுவையும் அதன் சந்ததியையும் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பு செய்துதரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பசு ஒரு புனிதமான விலங்கு எனவும், இந்து வேதங்களில் தாயாக அழைக்கப்படுவதாகவும் அந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2017 மே மாதத்தில் வெளியிடப்பட்ட மாடு விற்பனைத் தடை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தலைமையிலான அமைச்சர்கள் குழுவால் விவாதிக்கப்பட்டு 2017 அக்டோபர் மாதத்தில் திருத்தியமைக்கப்பட்டது.

இஸ்லாமியக் குடும்பங்களில் 18.6 விழுக்காடு கால்நடை உரிமையாளர்களாகவும், சீக்கியக் குடும்பங்களில் 40 விழுக்காடும், இந்துக் குடும்பங்களில் 32 விழுக்காடும், கிறித்தவக் குடும்பங்களில் 13 விழுக்காடும் கால்நடை உரிமையாளர்களாக உள்ளன.

சுமார் 6.34 கோடி இஸ்லாமியர்கள் (நாட்டின் இஸ்லாமியர்களில் 40 விழுக்காட்டினர்) மாட்டிறைச்சி அல்லது எருமை இறைச்சி உண்ணுவோராக உள்ளனர். ஒட்டுமொத்தமாக எட்டு கோடி இந்தியர்கள் மாட்டிறைச்சியையோ, எருமை இறைச்சியையோ உண்ணுகின்றனர். இவர்களில் 1.25 கோடி இந்துக்களும் அடங்குவர். இந்தியாவில் வெறும் 15 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே மாடு அல்லாத விலங்குகளை வளர்க்கின்றனர்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான விகாஸ் ராவல் பேசுகையில், “ஒவ்வோர் ஆண்டும் 3.4 கோடி ஆண் கன்றுகள் இந்தியாவில் பிறக்கின்றன. அவை எட்டு ஆண்டுகள் வாழும் என்று நாம் வைத்துக்கொண்டாலும், எட்டு ஆண்டுகளின் இறுதியில் ஏறத்தாழ 27 கோடி கூடுதலான பயனளிக்காத கால்நடைகள் நம்மிடம் இருக்கும். இந்தக் கால்நடைகளை பராமரிப்பதற்குக் கூடுதலாக ரூ.5.4 லட்சம் கோடி செலவாகும். இந்தச் செலவு, மத்திய, மாநில அரசுகளின் வருடாந்திர கால்நடை வளர்ப்பு பட்ஜெட்டை விட 35 மடங்கு கூடுதலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: இந்தியாஸ்பெண்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நேற்றைய கட்டுரை:மற்றவர்கள் மீது பழி சுமத்தும் அரசு!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon