கோழிக்குஞ்சுக்கு அவ்வளவு சத்தும் எப்படி வருது?

"/>மின்னம்பலம்:கிட்ஸ் கார்னர்!
மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

கோழிக்குஞ்சுக்கு அவ்வளவு சத்தும் எப்படி வருது?

வணக்கம் குட்டீஸ். நேத்து கேட்ட கேள்விகளை நல்லா புரிஞ்சுக்கிடீங்களா? இன்னொரு முறை நினைவூட்டவா...

1) மாடு உண்ணும் புல்லில் மெக்னீசியம்தான் இருக்கிறது. ஆனால், மாட்டுப் பாலில் கால்சியம் எங்கிருந்து வந்தது?

2) கோழி முட்டையில் புரதமும் கொழுப்பும்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு முழு கோழிக்குஞ்சு வளரும் அளவுக்கான சத்துகள் முட்டைக்குள் எப்படிச் சென்றன?

இது ரொம்ப ஆச்சர்யமான கேள்விகளா இருக்குல்ல குட்டீஸ்? பதிலும் ரொம்ப ஆச்சர்யமானதுதான். இந்தக் கேள்விதான் உடல் குறித்த மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. அது என்னன்னா...

"நாம் சாப்பிடுற உணவில் இருக்கும் சத்துகளை நம் உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. நம் உணவை அடிப்படை எரிபொருளாகக் கொண்டு தனக்குத் தேவையானவற்றை உடலே உற்பத்தி செய்துகொள்ளும்" - லூயி கேர்வரான்.

லூயி கேர்வரான் என்கிற விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் மூலம் இதைக் கண்டுபிடித்தார். உடல் சீரான இயக்கத்தில் இருக்கும்போது, நாம் உட்கொள்ளும் உணவுகள் உடலின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றமடையும்னு சொன்னாரு.

இதை புரிஞ்சுக்க செரிமானம் எப்படி நடக்குதுன்னு நாம தெரிஞ்சுக்கணும். அது ஒண்ணும் சிரமமான அறிவியல் இல்ல நண்பர்களே. ரொம்ப சிம்பிளான அறிவியல்தான்.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதம் செரிக்கப்பட்டு அமினோ அமிலமா மாற்றம் அடையுது. அப்படி மாற்றப்பட்ட அமினோ மூலக்கூறுகளை உடல் தனக்குத் தேவையான வடிவுல சேர்த்து புதுப் புரதமா உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புது. இது திரும்பச் சேர்க்கப்படும்போது, அவை பழைய புரதமாகவும் இருக்கலாம், புதுப் புரதமாகவும் மாறலாம். இது உடலின் தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.

அதனாலதான் முட்டையில் இருக்கும் புரதம், ஒரு முழு கோழிக்குஞ்சு வளரும் அளவுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளாக மாறியிருக்கு. ஆனா, அப்படி மாற்றுவதற்கு வெப்பம் தேவை. வெப்பத்தின் ஆற்றல்தான் புரதத்தைச் சிதைத்துப் பிற சத்துகளாக மாற்றுவது. அந்த வெப்பத்தைக் கொடுக்கத்தான் கோழி அடைக்காக்குது.

இதே வெப்ப ஆற்றல்தான், புல்லில் இருக்கும் மேக்னீசியத்தை கால்சியமாக மாற்றுவது. இதே வெப்பம்தான் நாம சாப்பிடுற சாப்பாட்டுல இருக்குற சத்துகளையும் தேவைக்கு ஏற்ப பிரிக்குது.

சரி, இந்த வெப்பம் நமக்கு எங்கே இருந்து கிடைக்குது?

- நரேஷ்

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon