மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

மதுரவாயல் சாலைக்காகக் கடற்படை நிலம்!

மதுரவாயல் சாலைக்காகக் கடற்படை நிலம்!

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்குக் கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

சென்னை துறைமுகத்துக்கு கண்டெய்னர் லாரிகள் சரக்குகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வசதியாகவும், சரக்குப் போக்குவரத்து விரைவுச் சேவைக்காகவும் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

18 கிலோமீட்டர் தூரத்துக்கு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது. ரூ.3,000 கோடி செலவில் ஆறு வழிப் பாதை உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுப் பாதை வழியாக, மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கான பறக்கும் சாலை வழித்தடம் அமையவுள்ளது.

இதற்கான கட்டுமானத் திட்டப் பணிக்காகக் கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. பறக்கும் சாலை திட்டப் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு, மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றன.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon