மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ஆலையை மாற்றும் மாருதி சுஸுகி!

ஆலையை மாற்றும் மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம் தனது கோர்கான் ஆலையை ஹரியானாவுக்கு மாற்றவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கோர்கான், மனேசர் மற்றும் குஜராத் ஆகிய மூன்று பகுதிகளில் ஆலை அமைத்து கார்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கோர்கான் ஆலையை ஹரியானாவின் வேறு பகுதிக்கு மாற்ற இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசியத் தலைநகர் பகுதிக்கு வெளியில் ஆலையை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆலையை மாற்றும் முயற்சியில் மாருதி சுஸுகி நிறுவனம் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் புதிய ஆலை இயங்குவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுகுறித்துப் பதிலளிக்க மறுத்துவிட்டதாக எகனாமிக் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் 1983ஆம் ஆண்டு முதல் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வாகனத் தயாரிப்பில் இந்தியாவின் மிக முக்கிய ஆலைகளில் இதுவும் ஒன்றாகும். கோர்கானிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள சோஹ்னா பகுதியில் புதிய ஆலைக்கு நியாயமான விலையில் 1,200 முதல் 1,400 ஏக்கர் வரை ஹரியானா அரசு நிலம் ஒதுக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon