மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

சிகரம் நோக்கி சீமராஜா!

 சிகரம் நோக்கி சீமராஜா!

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் - ஒரு அலசல் - 9

ரெமோ, வேலைக்காரன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து நேற்று (செப்டம்பர் 13) வெளியான மெகா பட்ஜெட் படம் சீமராஜா. பைனான்ஸ் பாக்கி காரணமாக தடுமாறினாலும் காலை 8 மணி காட்சிக்கு திட்டமிட்ட அடிப்படையில் படம் திரையிடப்பட்டது.

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாகவே ஏற்படுத்தப்பட்டிருந்தது. டிக்கெட் முன்பதிவு எதிர் பார்த்த அளவு இல்லை என்றாலும் காலை 10.30 காட்சி தமிழகம் முழுவதும் அரங்கு நிறைந்த காட்சி ஆரவாரமான ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார் படங்களுக்கு இணையான ஓப்பனிங் தியேட்டர்களில் நான்கு காட்சிக்கும் இருந்தது என்பதை வசூல் விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன் படங்களைக் காட்டிலும் அதிகளவில் சீமராஜா படத்திற்கு ஓப்பனிங் இருந்தது என்கிறது தியேட்டர் வட்டாரம்.

மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்திற்கு முதல் நாள் 12.50 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனது. அதற்கு இணையாக சீமராஜா முதல் நாள் மொத்த வசூல் 11.50 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. காலா படம் வெளியான அன்று போட்டிக்கு படம் எதுவும் வெளியாகவில்லை; அதே நேரம் காலா படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டது. சீமராஜா படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.

படம் எப்படி இருந்தாலும் பிரம்மாண்டமான வசூல் ஓப்பனிங் கொடுக்கக் கூடிய கதாநாயகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாளான இன்று காலை காட்சி வசூல் நேற்றைய வசூலில் இருந்து 50% புறநகர்ப் பகுதிகளில் குறைந்தாலும், நகர்ப்புறங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே சீமராஜா நிலை கொண்டுள்ளது.

பொதுவாகத் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் கூட்டம் குறைந்து வரும் நிலையில், முதல் நாள் வசூல் 11.50 கோடி ரூபாய் என்பது முதல் தரமான வசூல் என்கின்றனர் விநியோகஸ்தர்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சீமராஜாவின் வசூல் அதிகரிக்கக்கூடும் என்பதே தற்போதைய நிலைமை.

சீமராஜாவின் பிரம்மாண்டமான பட்ஜெட் தமிழகத்தில் தியேட்டர் வசூல் மூலம் நிறைவடையுமா, லாபம் கிடைக்குமா என்பதற்குத் திங்கள்கிழமை தமிழ்நாடு மொத்த வசூல் மூலம் விடை கிடைக்கலாம்.

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

மதுரையில் பறக்குமா சீமராஜா கொடி?

நெல்லையில் நிலைகொள்ளுமா சீமராஜா?

திருச்சி திருப்பத்தை தருமா?

சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன?

கோவையில் தாக்குபிடிக்குமா சீமராஜா?

சீமராஜா சாதிக்குமா, சறுக்குமா?

சீமராஜா: ஒரு நாள் மட்டும் அனுமதி!

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon