மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

பெண் தாக்குதல்: போலீஸ் அதிகாரி மகன் கைது!

பெண் தாக்குதல்: போலீஸ் அதிகாரி மகன் கைது!

டெல்லியில் பெண் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

டெல்லி உத்தம் நகர் பகுதியிலுள்ள தனியார் கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவரை, வாலிபர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதாகத் தகவல் வெளியானது. இதனை அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளமொன்றில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது இதையடுத்து, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் என்பதால், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்த வீடியோவை பார்த்த மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பந்தப்பட்ட வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி ஆணையர் அமுல்யா பட்நாயக்கிடம் உத்தரவிட்டார். இதனையடுத்து, ரோஹித் சிங் டோமர் எனும் அந்த வாலிபர், இன்று (செப்டம்பர் 14) கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில், பாதிப்புக்குள்ளான பெண் இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது நண்பரின் அலுவலகத்துக்கு வரவழைத்து ரோஹித் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனை போலீசாரிடம் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று கூறி கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon