மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 21 நவ 2019

வரலட்சுமி வெளியிட்ட ‘தனுஷ் பட’ சீக்ரெட்!

வரலட்சுமி வெளியிட்ட ‘தனுஷ் பட’ சீக்ரெட்!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘மாரி- 2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

முன்னதாக தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்து திரைக்குவந்த படம் மாரி. பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது மாரி- 2 படம் உருவாகிவருகிறது. நடிகைகள் சாய் பல்லவி, வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமியும் நடித்துள்ளார். ட்விட்டரில் படு ஆக்டிவாக இருந்துவரும் அவர், தான் நடித்துவரும் படங்களின் லேட்டஸ்ட் தகவல்களை அவ்வப்போது பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது மாரி-2 படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

அதில், தான் நடிக்கும் மாரி-2 படத்தில் தனக்கான கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகக் கூறியிருக்கிறார். மேலும், அந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ந்திருக்கும் அவர், பட வெளியீட்டுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் நடிக்கும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவு குறித்தும் அறிவித்திருந்தார்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon