மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

ஏழைகளுக்கு உதவும் அமேசான் நிறுவனர்!

ஏழைகளுக்கு உதவும் அமேசான் நிறுவனர்!

உலகின் நம்பர் 1 பணக்காரரான ஜெஃப் பெசோஸ் ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் பள்ளிக் கூடங்கள் கட்டித்தர முன்வந்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ் அதிக சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக விளங்குகிறார். இவருடைய சொத்து மதிப்பு செப்டம்பர் மாத கணக்குப்படி 162.7 பில்லியன் டாலர்களாகும். அமேசான் நிறுவனம் உலகின் முதன்மை ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமாக விளங்குகிறது. ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து சிறந்த நன்கொடையாளராகவும் இருக்கிறார். அந்தவகையில் தற்போது, வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரவும், குறைந்த ஊதியம் கொண்ட சமூகக் குழுக்களின் குழந்தைகளுக்கு பள்ளிக் கூடங்கள் கட்டி, கல்விச் சேவை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பணிகளுக்காக 2 பில்லியன் டாலர் வரையில் செலவிடத் திட்டமிட்டுள்ளதாக ஜெஃப் பெசோஸ் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நன்கொடை வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கடந்த ஆண்டிலேயே ட்விட்டரில் ஜெஃப் பெசோஸ் ஆலோசனை கேட்டிருந்தார். அதில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக அவர் கருத்து கேட்டிருந்தார். அமேசான் நிறுவனம் 1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பங்குச் சந்தையில் 1 லட்சம் கோடி டாலரை எட்டிய உலகின் இரண்டாவது நிறுவனம் அமேசான். முதன்முதலில் இந்தப் பெருமையை எட்டியது ஆப்பிள் நிறுவனமாகும்.

வெள்ளி, 14 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon