மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 செப் 2018

‘மெர்சல்’ காட்டாத ‘2.O’ டீசர்!

‘மெர்சல்’ காட்டாத ‘2.O’ டீசர்!

அஜித்தின் விவேகம், ரஜினியின் 2.O ஆகிய படங்களின் டீசர்கள் வெளியானபோதும் விஜய்யின் மெர்சல் பட டீசர்தான் இன்னும் சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ளவர்களான ரஜினி, விஜய், அஜித் போன்றோரின் படங்கள் குறித்த எந்த அறிவிப்பு வந்தாலும் கூகுளே டயர்டு ஆவது உறுதி. சோஷியல் மீடியாவில் அவைதான் பேசு பொருளாக இருக்கும். அதிலும் அவர்கள் நடித்த பட டீசர் ட்ரெய்லர் போன்றவை ரிலீஸ் ஆனால் சொல்லவே வேண்டாம்.

இப்படியான சூழல்கொண்ட இணைய உலகில் தங்களது ஆதர்ச நடிகரின் டீசர்கள், ட்ரெய்லர்கள் எவ்வளவு லைக்ஸ் அள்ளுகிறது; எத்தனை வியூவ்ஸ் போகிறது எனப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் இந்த இணையவாசிகள். இது முந்தைய காலங்களில் தங்களின் ஆதர்ச நாயகர்களின் படங்கள் எத்தனை நாள் ஓடுகின்றன எனும் தகவலை கணக்கெடுத்ததன் நவீன வடிவம் என்றும்கூட சொல்லலாம். ஆகவே இந்த லைக்ஸையும், வியூவ்ஸையும் கூட ரொம்பவே முக்கியமானதாகக் கருதுகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் நடித்த மெர்சல் படத்தின் டீசர், யூடியூப்பில் வெளியிடப்பட்டிருந்தது. கம்யூட்டர் கர்சரிலும், மொபைல் போன் டிஸ்பிளேவிலும் கையை வைத்தபடியே இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை. லைக்ஸையும் வியூஸையும் வாரி வழங்கியிருந்தார்கள் ரசிகர்கள். விளைவு, அதுவரை எந்த தமிழ்ப்படத்திற்குமே இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் சுமார் 11மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது மெர்சல்.

விஜய்யின் மெர்சல் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கொண்ட படமாகக் கருதப்பட்டது அடுத்ததாக வெளியிடப்பட்ட அஜித்தின் விவேகம் பட டீசர். அதுவும் லைக்ஸ்களையும் வியூஸ்களையும் பெருவாரியாகக் குவித்ததுதான், ஆனால் மெர்சலின் அளவில் பாதிகூட அந்த டீசரால் தொடமுடியவில்லை. விவேகம் 24 மணி நேரத்தில் சுமார் 5.6 மில்லியன் பார்வைகளையே தொட்டது.

இந்நிலையில் தற்போது பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள ரஜினியின் 2.O டீசர் மெர்சல், விவேகம் சாதனைகளைத் தகர்க்குமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. 2.O டீசர் 24 மணிநேர கணக்குப்படி சுமார் 9.4 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. இதை லைக்கா நிறுவனம் ட்விட்டரில் கூறியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்றையும் சேர்த்தால் 2.O டீசர் சுமார் 32 மில்லியனைத் தொடுகிறதுதான், ஆனால் தமிழ் டீசர் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளதால், 24 மணி நேர பந்தய ஓட்டத்தில் மெர்சல் டீசரே 2.O டீசரைவிட முன்னிலையில் உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

வெள்ளி 14 செப் 2018