மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கண்ணீரை அடக்குவதால் உண்டாகும் இழப்புகள்!

 கண்ணீரை அடக்குவதால் உண்டாகும் இழப்புகள்!

கண்ணீர் என்பது உலகின் மிக மோசமான திரவம். ஆனால், அதனை வெளியேற்றினால் தான், நம்மால் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, உணர்வெழுச்சியான சூழல்களைக் கடக்கும்போது, பீறீடும் கண்ணீரைக் கட்டுப்படுத்தக்கூடாது. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்ற சொல் கேட்டு வளர்ந்த நாம், அழுவது பலவீனம் என்று நம்பி வருகிறோம். அதனால், நமது அழுகையானது எந்த இடத்தில் வெளிப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிக்காமல் விட்டுவிடுகிறோம்.

நான்கு பேர் முன்னால் அழக்கூடாது; எந்தவொரு கடுஞ்சொல்லுக்கும், துயர நிகழ்வுக்கும், மனதைப் பாதிக்கும் விஷயத்துக்கும் உடனே அழுதுவிடுவது நல்லதல்ல; அழுவதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை; அழுவது பிரச்சினையைத் தீர்க்காது என்பது உட்படப் பல்வேறு சொல்லாடல்கள் கண்ணீர் குறித்துச் சொல்லப்படுகின்றன. இதனைத் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் பயன்படுத்துவோரும் நம்மிடையே உண்டு.

இன்றைய தலைமுறை பல விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. கண்ணீரைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது அதில் ஒன்று. எதற்கும் அழக்கூடாது என்ற எண்ணத்தில், நாம் நம் மனதை மேலும் இறுக்கமாக்குகிறோம். ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்ந்து, கட்டுப்படுத்திய கண்ணீரெல்லாம் மிகப்பெரிய மனநலப் பிரச்சினையாக உருவெடுக்கிறது. அந்த உண்மையை உணர்ந்தபிறகு, இயல்பாக வெளியேற வேண்டிய கண்ணீரைக் கூட நமது கண்கள் வெளியேற்றுவதில்லை.

துக்கம் மட்டுமல்ல; சந்தோஷத்தை அதீதமாக வெளிப்படுத்த மிக உன்னதமான வழி அழுவதுதான். இந்த அழுகையை மறந்ததால் தான், நாம் இன்று மன அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். மைண்ட் ஸோன் மருத்துவமனையில் தரப்படும் சிகிச்சைகள், நமது இயல்புகளை மீட்டெடுக்கிறது. இறுகிய மனதை இலகுவானதாக மாற்றுகிறது. இந்த மருத்துவ மனையை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன் மருத்துவமனை
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon