மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

விலை குறையும் ஐ-போன்கள்!

விலை குறையும் ஐ-போன்கள்!

ஆப்பிளில் புதிய மாடல்களின் படையெடுப்பால் பழைய ஐ-போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

நீண்ட காத்திருப்புகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான ஆப்பிளின் புதிய படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. iPhone XS, iPhone XS Max என்ற உயர் ரக ஐ-போன்களின் வரிசையில் iPhone XR என்ற குறைந்த விலை ஐபோனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த ஜென்ரேஷனுக்கான ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-4ம் அறிமுகமாகியுள்ளது. சீரிஸ்-4 ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ.28,700ல் தொடங்கி 40,900 வரை விற்பனைக்கு வருகிறது.

தற்போது இந்த புதிய மாடல் ஐ-போன், ஸ்மார்ட் வாட்ச்களின் படையெடுப்பால் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய மாடல்களின் விலை சரிந்துள்ளது. அதன்படி ரூ.32,380க்கு விற்பனையாகி வந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-3 GPS தற்போது ரூ.28,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரூ.39,080க்கு விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லூலர் எடிசன் தற்போது ரூ.37,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விற்பனையாகும் ஆப்பிள் சீரிஸ் 3 மாடல்கள் அனைத்தும் சீரிஸ் 4ல் உள்ள watchOS 5 இயங்குதளத்துக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிளின் முந்தைய ஐ-போனான 6S மாடல் ரூ29,900ஆகவும், இதைவிடப் பெரிய திரையைக் கொண்ட 6S Plus ரூ.34,900ஆகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐ-போன் X 64GB ரூ. 95,390லிருந்து ரூ.91,900ஆகவும், ஐ-போன் X 256GB ரூ.1,08,930லிருந்து ரூ.1,06,900ஆகவும் குறைந்துள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon