மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

எல்லாம் ஒரு தாய் பிள்ளை தானே: அப்டேட் குமாரு

எல்லாம் ஒரு தாய் பிள்ளை தானே: அப்டேட் குமாரு

யார் வண்டி ஏத்தி அனுப்பிவிட்டா என்ன, அங்க அவர் சந்தோஷமா இருக்கார். அவர் கொடுக்காத பணத்தை நாம தான் ஆளுக்கு கொஞ்சமா கட்டிகிட்டு இருக்கோம். அது பிரச்சினை இல்ல, நடந்து முடிஞ்சுருச்சு. இது தவிர எந்தெந்த ஊருல வேற யாருலாம் போயிருக்காங்களோ, அதுக்கு எவ்வளவு பிடிக்கப் போறாங்கன்னு நினைக்கும் போது தான் பதறுது. மாசம் ஒண்ணாம் தேதி ஆனா வர்ற சம்பளம் பணம் அத்தனையும் அந்த கடனை அடைக்குறதுக்கே போயிடும்ன்னு நினைக்குறேன். எங்க அண்ணாத்தை ஒருத்தர் கடன் கேட்டப்ப கூட நான் கொடுக்கல. இப்ப யார் யார் கடனை எல்லாம் அடைக்கவேண்டியதா போச்சுன்னு பார்த்தீங்களா.. அப்டேட்டை பாருங்க, எதுக்கும் என் அக்கவுண்டை செக் பண்ணிட்டு வந்துடுறேன்..

@Thaadikkaran

சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனைக்கு மத்தியஅரசு தடை # மத்திய அரசுக்கு தலைவலியை தந்திருக்கும் போல..!

@Kozhiyaar

முடியாத வாக்குறுதிகளை விட, முடியாது என்ற சொல் நல்லது!!!

@rahimgazali

`ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குங்கள்'- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

காசா பணமா? அப்படியே நமக்கு ஒண்ணு கேட்க வேண்டியதுதானே?!

@avavinoth

சில நேரங்களில் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது தூக்கி ஆழத்தில் போடத்தான்.

புரிந்து கொள்ளல்:

@rahimgazali

அமைச்சர்களின் ஊழலை விட, அமைச்சர்களோடு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் நடந்த ரெய்டைவிட ப்யூட்டி பார்லர் மேட்டர்தான் இப்போது இந்த சமூகத்தின் முக்கியமான பேசுபொருள்.

@vanitha0212

Bathroom ல பாடும்போது குரல் நல்லாதான் இருக்கு அதையே record பண்ணி கேட்டா கண்றாவியா இருக்கு. கண்ணாடில பாத்தா மூஞ்சி நல்லாத்தான் இருக்கு அதையே selfie எடுத்து பாத்தா பயங்கரமா

இருக்கு. என்ன technology யோ..

போங்கப்பா

@Thaadikkaran

கடன்களை திருப்பித் தர தயார்: விஜய் மல்லையா

எங்க அக்கவுண்ட்ல எடுத்த பணத்தை திரும்ப போட SBI தயாரா - மக்கள்.!

@Endhirapulavan

நான் சரளமா பிழையில்லாம ஆங்கிலம் பேசனும்னு எங்கப்பா ஆசப்பட்டார்

என் மகன் சரளமா பிழையில்லாம தமிழ்ல பேசனும்னு நான் ஆசைப்படுகிறேன்

@saravananucfc

நல்ல ஹோட்டலுக்கு போறப்ப சாப்பாடு எவ்வளவுனு கேட்காமல் ஆர்டர் பண்ணும் அளவுக்கும், பஸ்ல வெளியூர் பயணம் போறப்ப பஸ் கட்டணம் எவ்வளவுனு கேட்காமல் டிக்கெட் எடுக்கும் அளவுக்கும் இருப்பதே, நம்ம நல்ல நிலையில் இருக்கிறோமா இல்லையா என்பதை எளிதில் காட்டிவிடுகிறது.

@kathir_twits

நாட்டை ஆளும் மன்னனின் வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது - ஓபிஎஸ்

அதான் உங்க ஆட்சி மேலே பேனாவில் எழுதிய குற்ற பத்திரிகை நிறையா தாக்கல் ஆகுது போல!

@ajmalnks

சென்னை புழல் சிறையில் டிவி,செல்போன் என சகல வசதிகளுடன் கைதிகள்...திடீர் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி அதிர்ச்சி.-செய்தி

இதெல்லாம் ஒரு மேட்டரா?நாங்கள்லாம் வாராவாரம் ஷாப்பிங்கே போவோம்-

சசிகலா மைன்ட்வாய்ஸ்

@rahimgazali

யானையை கட்டி தீனி போடுவதென்பது இப்போது பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கும் பொருந்தும்.

@Thaadikkaran

நான் நிதி அமைச்சர் ஜெட்லீயை சந்தித்து விட்டு தான் இந்தியாவில் இருந்து கிளம்பினேன் - விஜய் மல்லையா#டிக்கெட் அவர்தான் எடுத்து கொடுத்திருப்பாரோ..!

@kathir_twits

உப்பு அதிகமாக போட்டு சாப்பிட கூடாது என்ற வாக்கியத்திற்குள் பல சமையல் குறைகள் ஒளிந்து கொள்கின்றன !

@Thaadikkaran

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது - பியூஷ் கோயல்# செஞ்சுரி அடிக்கட்டும்னு வெய்ட் பண்றதுக்கு சச்சினா பேட்டிங் பன்றார் சார்..!

@smhrkalifa

பைக் ஓட்டும் பொது போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் போட்டுட்டு ஒட்டனும் என்று சொல்லும் அரசாங்கம்,அப்படியே பின்னால் உட்கார்ந்து வரும் மனைவியையும்,கணவனிடம் பேச வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன்.

@yugarajesh2

எம்.பி பதவியையும் கொடுத்து; பேங்கல கடனையும் வாங்கி கொடுத்து; வெளிநாட்டுக்கு தப்பிச்சு போக ஐடியாவும் கொடுத்து இருப்பாங்க போல

@rahimgazali

பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் குழு அமைத்துள்ளதால் தேர்தலுக்குள் பெட்ரோல் விலை குறையும்

- இல.கணேசன் #

தேர்தலுக்காக விலை குறையும்ன்னு சொல்லுங்க

@itzkarthik_v

‘இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுங்கள்’: தமிழக இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

உதவ கிளம்பலாம்தான் தோணுது.. ஆனா பெட்ரோல் போடதான் பாக்கெட்ல காசு இல்ல..

-லாக் ஆஃப்

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon