மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 17 அக் 2019

காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 13) தெரிவித்துள்ள தகவலின்படி, "வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யவுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இது தொடர வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். கடலில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலில் பலத்த காற்று வீசும்ஓரிரு இடங்களில் பெருமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon