மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 17 நவ 2019

கேப்டன் ஆனார் ரஹானே

கேப்டன் ஆனார் ரஹானே

விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி செப்டம்பர் 19ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் கலக்கிய ஸ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாகியுள்ளார். இளம் வீரர் பிருத்வி ஷாவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் பங்கேற்ற ரஹானேவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும் பத்து இன்னிங்ஸில் சேர்த்து மொத்தம் 257 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 25.70. அங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில்தான் தற்போது கேப்டன் ஆகியுள்ளார் ரஹானே.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இதில் இடம்பெற்றுள்ள ரஹானேவுக்கும் ஸ்ரேயஸ் ஐயருக்கும் இடம் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon