மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ரூ.11,528 கோடி அபராதம் விதித்த வங்கிகள்!

ரூ.11,528 கோடி அபராதம் விதித்த வங்கிகள்!

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையை கணக்கில் வைத்திருப்பது அவசியமாகும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் கணக்கில் குறைந்தபட்சத் தொகை வைத்திருக்காதவர்களிடம் இருந்து ரூ.11,528 கோடி அபராதம் வசூலித்துள்ளன வங்கிகள். 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், வங்கிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப அபராதத் தொகையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்ற உரிமையை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தது.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில், 2017-18ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 3 தனியார் மற்றும் 21 பொதுத் துறை வங்கிகளில் உள்ள கணக்குகளில் குறைந்தபட்சத் தொகை இருப்பு வைக்காதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை முந்தைய ஆண்டை விட இருமடங்கு உயர்ந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது கணக்கில் வைக்க வேண்டிய குறைந்தபட்சத் தொகையை அதிகரித்ததே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15ஆம் ஆண்டில், ரூ.2,084 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் 2,138 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் 2,318 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது, 2017-18ஆம் ஆண்டில் ரூ.4,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

அதிகளவில் அபராதத் தொகை வசூலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon