மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

‘வீர அபிமன்யு’வைப் பிரதிபலிக்கும் ‘பார்ட்டி’!

 ‘வீர அபிமன்யு’வைப் பிரதிபலிக்கும் ‘பார்ட்டி’!

வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்தின் ‘தேன் புதுத் தேன்’ எனும் பாடல் வெளியிடப்பட்டு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

சிவா, ஜெய்,ஷாம், ‘கயல்’ சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, சத்யராஜ், ஜெயராம், நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்து வரும் படம் பார்ட்டி. சென்னை 28 -2 படத்தையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் இந்தப் படம் கேங்க்ஸ்டர் காமெடி வகை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தன் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நடிகராக மட்டுமே வலம்வந்துகொண்டிருந்த பிரேம்ஜி இதில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது.சூர்யா கார்த்தி உள்ளிட்டோர் பாடியிருந்த இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சா சா சாரே எனும் பாடல் முன்னதாக வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்திலிருந்து இன்னொரு பாடலும் லிரிக்கல் வீடியோவாக இன்று (செப்டம்பர் 13) வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பாடியுள்ள இந்தப்பாடல், கயல் சந்திரனுக்கும் நிவேதாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகளுக்கான பின்னணிப் பாடல்போல வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘தேன் புதுத் தேன்’ எனத் துவங்கும் இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். பொதுவாகவே ஜிவியும் சைந்தவியும் இணைந்து பாடும் பாடல்கள் மெலடி டூயட் வகைப் பாடலாகவே அமைவதுண்டு. இந்த முறையும் அதே பாணியிலேயே பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

கே.வி.மஹாதேவன்-கண்ணதாசன் காம்போவில் ‘வீர அபிமன்யு’ படத்தில் வந்த “பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்” மற்றும் வித்யா சாகர்-தாமரை காம்போவில் ‘குருவி’ படத்தில் வந்த “தேன் தேன் தேன் உன்னைத் தேடி அழைத்தேன்” போன்ற பாடல்களை நினைவுபடுத்துவதாக உள்ளன இந்தப் பாடலின் வரிகள்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon