மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

புதுச்சேரி கண்ணன்: மீண்டும் புதிய கட்சி!

புதுச்சேரி கண்ணன்: மீண்டும் புதிய கட்சி!

நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு புதுவையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணன் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக நேற்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கண்ணன், 1996ல் கட்சியிலிருந்து விலகி ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்..

2001ஆம் அண்டு தமாகவில் இருந்து விலகி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற தனி கட்சியைத் தொடங்கினார். பிறகு மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். 2006ல் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். 2009 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார், மாநிலங்களவை எம்பியாக ஆனார். அவரது பதவிக்காலம் முடிந்தவுடன் அதிமுகவில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் மீண்டும் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் கண்ணன்.

புதிய கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருவதாகவும், கட்சி, பெயர் தொடர்பான விவரங்களைப் பின்னர் அறிவிப்பதாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கட்சி சார்பில் வருகிற மக்களவைத் தேர்தலில் தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசு அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் கண்ணன் கூறியுள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon