மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

எளிதில் கெடாத பழம்!

எளிதில் கெடாத பழம்!

தினப் பெட்டகம் – 10 (13.09.2018)

மாதுளம்பழத்தைப் பற்றிய சில தகவல்கள்:

1. மாதுளம்பழங்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில்தான் ஆரம்பத்தில் தோன்றின.

2. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், இரண்டு மாதங்கள் வரை மாதுளைகள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

3. மாதுளை மரங்கள் சராசரியாக 200 ஆண்டுகள் வரை வாழும்.

4. மாதுளைச் செடிகள் 6-10 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. பல கிளைகள் கொண்ட செடியாக இருக்கும்.

5. உலகத்தில் 760 வகையான மாதுளைகள் இருக்கின்றன.

6. கிமு1000இல் உள்ள மாதுளையின் எச்சங்கள் கிழக்கு ஐரோப்பாவில் கிடைக்கின்றன.

7. மாதுளையின் தாவரவியல் பெயர்: Punica Granatum.

8. 100 கிராம் மாதுளையில் 83 கலோரிகள் மட்டுமே இருக்கும்.

9. பண்டைய எகிப்தியர்களின் உடலைப் புதைக்கும்போது ஒரு மாதுளம்பழத்துடனேயே புதைத்திருக்கிறார்கள்.

10. டா வின்சி தனது ஓவியத்தில் மாதுளைச் சாற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.

- ஆஸிஃபா

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon