மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 பிப் 2020

தற்கொலைகளில் பெண்களே அதிகம்!

தற்கொலைகளில் பெண்களே அதிகம்!

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களே அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு தெரிவித்துள்ளது.

தற்கொலைகள் தொடர்பான ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் மற்றும் மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டன. அந்த ஆய்வில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் மக்கள் தொகையில் 15லிருந்து 39 வரையிலான நபர்களே தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 37 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.

உலக அளவில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகளின் பங்களிப்புதான் முக்கிய காரணமாகும். 2016இல் பெண்களில்,15லிருந்து 29 வயது வரையிலான நபர்கள் மத்தியில் 71.26 விழுக்காடு அதிகரித்துள்ளது. 15லிருந்து 39 வயது வரையிலானவர்கள் மத்தியில் 57.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கையானது 1990லிருந்து 2016 வரை பெண்கள் மத்தியில் 25.3 விழுக்காடிலிருந்து 36.6விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அதே போல ஆண்கள் மத்தியில் இதே கால கட்டத்தில் 18.7லிருந்து 24.3 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் பலராம் பார்கவா கூறுகையில், 1990லிருந்து 2016வரை இந்தியாவின் பங்களிப்பானது மிகவும் அதிகரித்துள்ளது. இது வருத்தத்திற்குரிய விசயமாகும். இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உடனடியாக செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இவற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த இளம் உயிர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக முயற்சிகளை எடுப்பது அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon