திருவண்ணாமலை அருகே எட்டாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு, ஆங்கிலம் மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் குன்னியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த சரவணன், தொடக்கத்தில் திண்டிவனம்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, குன்னியந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு, அவர் ஆங்கில மருத்துவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்குப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதன் ஒருபகுதியாக, சரவணன் வீட்டிற்குள் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த மருந்து, மாத்திரைகள், காயங்களுக்கு மருந்திடுவதற்கானஉபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினார்.
இதையடுத்து சரவணனிடம் நீதிபதி மகிழேந்தி மேற்கொண்ட விசாரணையில், 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் அவர் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதைக் கண்டித்த நீதிபதி மகிழேந்தி, போலி மருத்துவர் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.போலீசாரும் சரவணனைக் கைது செய்தனர்.