மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

22 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

22 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி டி.கே.ராஜேந்திரன். இதுகுறித்த அறிவிப்பு இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது.

1. பெண்களுக்கான குற்றத் தடுப்பு மதுரை டிஎஸ்பி மகேந்திரன், மதுராந்தகம் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

2. தர்மபுரி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி சுப்பையா, சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

3. திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி கங்காதரன், திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

4. சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி விஸ்வநாத் ஜெயின், தரமணி உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. தரமணி உதவி ஆணையர் சுப்பராயன், பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

6. பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியான பன்னீர்செல்வம், மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுக் குழு உதவி கமிஷனர் கோவிந்தராஜு, பரங்கிமலை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. பரங்கிமலை உதவி ஆணையர் மோஹன்தாஸ், மதுரை நகர குற்றப் பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. திருவள்ளூர் குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி கண்ணன், ராயபுரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. ராயபுரம் உதவி ஆணையர் தனவேல், சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

10. சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் சச்சிதானந்தம், ஆம்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்

இந்த பத்து அதிகாரிகள் உட்பட தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon