மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

அழகிரி-செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு!

அழகிரி-செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு!

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் செல்லூர் ராஜூ உள்ளார். திமுகவை எதிர்க்கும் விதமாக கடந்த சில நாட்களாகவே மு.க.அழகிரியை செல்லூர் ராஜூ, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக செல்லூர் ராஜூ, “அழகிரியின் 40 ஆண்டுகள் அரசியல் பணியை பற்றி மதுரையில் உள்ள எனக்குத் தெரியும். அவரது திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு ஆகியவை எனக்குத் தெரியும்” என்றும் பல வருடங்களாக கட்சியில் எந்த பதவியில் இல்லாமல் இருந்தாலும் அவர் தனது தந்தைக்கு மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி ஒரு பேரணியை நடத்தி முடித்துள்ளார் என்றும் புகழ்ந்திருந்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 30ஆம் தேதி காலமானர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் பழனிசாமி மதுரை சென்று செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில், செல்லூரில் அமைந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு மு.க.அழகிரி இன்று சென்றார். அமைச்சரின் தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்திய அழகிரி, தொடர்ந்து செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “அமைச்சரின் தாயார் மறைவையடுத்து துக்கம் விசாரிப்பதற்கு வந்தேன். நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றுமில்லை” என்று கூறிவிட்டுச் சென்றார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon