மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

அடுத்த ஐ-போனின் இந்திய விலை தெரியுமா?

அடுத்த ஐ-போனின் இந்திய விலை தெரியுமா?

தொழில்நுட்பத் துறையின் முன்னோடியாகத் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐ-போன் மாடல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஆப்பிள் பார்க்கில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்ற ஆப்பிள் வெளியீட்டு விழாவில் ஐ-போனின் அடுத்த 3 மாடல்கள் வெளியாகின. ஓராண்டு காத்திருப்புக்குப் பின் வெளியாகியிருக்கும் இந்த மொபைல்களில் பயனர்களுக்கு பிடித்தமான பல அம்சங்களை அந்நிறுவனம் புகுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ஆப்பிளில் முதல் முறையாக டூயல் சிம் மற்றும் டூயல் standby வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 1 Gbps வேகத்தில் செயல்படும் Gigabit LTE தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 3 மாடல்களில் 5.8-inch OLED display கொண்ட மாடலுக்கு iPhone XS என்றும், 6.5-inch OLED display கொண்ட மாடலுக்கு iPhone XS Max என்றும் பெயரிடப்பட்டுள்ளது. குறைந்த விலை ஐ-போன் என்ற வகையில் iPhone XR என்ற மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த ஜென்ரேஷனுக்கான ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-4ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளியான ஆப்பிள் மொபைலின் இந்திய விலை

அறிமுக விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், "98 சதவிகித வாடிக்கையாளர்களின் திருப்தி விகிதத்தைக் கொண்டு, ஆப்பிள் உலகின் நம்பர் 1 ஸ்மார்ட்போனாக உருவெடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள iPhone XS, iPhone XS Max சீரிஸ் இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இதில் இதுவரை நாங்கள் உருவாக்கிய ஐ-போனிலேயே மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

விலைகுறைவான ஐ-போன் என்ற முறையில் இந்தியாவில் வரும் 26ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள iPhone XR போனின் இந்திய விலை ரூ. 76,900 ஆகும். இது கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 9-ன் விலையை (ரூ.67,900) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon